கடனுக்காக அடகு வைக்கப்பட்ட குரான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 19 லட்சம் கடனுக்காக, அடகு வைக்கப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்புள்ள, கை விரல் அளவே கொண்ட, திருக்குரான் புனிதநூலை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

நாகப்பட்டனம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரைச் சர்ந்தவர் அமீனுல்லா ஹக். விவசாயியான ஹக், சென்னைக்குவந்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், புரசைவாக்கம் பண்டாரம் தெருவில் வசிக்கும் தேவராஜ் என்பவரிடம் ரூ. 36 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதில், ரூ.19 லட்சம் திரும்பக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

இந் நிலையில் என்னிடம் ஒரு திருக்குரான் நூல் இருந்தது. அதன் உண்மையான மதிப்பு ரூ. 1.5 கோடியாகும். மிகவும்அபூர்வமான குரான் நூல் அது. 17வது நூற்றாண்டில் கையினால் செய்யப்பட்ட தாளில், நாட்டு மையினால் அரபி மொழியில்அந்த நூல் எழுதப்பட்டது. கை விரல் அளவே அந்த நூல் இருக்கும். எனது முப்பாட்டனார் அப்துல் ரகுமான் என்பவர், அரேபியபெண்ணை மணந்தபோது அவருக்கு சீதனமாக இந்த நூல் கொடுக்கப்பட்டது.

தேவராஜுக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாமல் இருந்ததால் இந்த நூலை அவரிடம் அடகு வைத்தேன்.குரானை விற்று ரூ. 19 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தை என்னிடம் கொடுக்குமாறு அவரிடம் கூறினேன்.

தேவராஜும் நூலை எடுத்துக் கொண்டு மலேசியா சென்றார். அங்கு சென்ற பின்னர் மீண்டும் சென்னை திரும்பினார். அவரைஅணுகி குரானை விற்று விட்டீர்களா என்று கேட்டபோது எதுவும் கூற மறுத்து விட்டார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றுஹக் கூறியிருந்தார்.

இதைக் கேட்டதும் திகைப்படைந்த ஆணையர் நடராஜ், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட தேவராஜைமத்திய குற்றப்பிவு போலீஸார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் குரானை விற்கவில்லை என்றும், அதுபத்திரமாக தன்னிடமே இருப்பதாகவும் தேவராஜ் கூறினார்.

இதையடுத்து நிம்மதியடைந்த போலீஸார் குரானை மீட்டு ஹக்கிடம் கொடுத்தனர். குரானை அடகு வைத்ததற்காக ஹக் வருத்தம்தெரிவித்தார். அவருக்கு ஆணையர் நடராஜ் அறிவுரைகள் கூறினார். கடன் தொகையை இன்னும் ஒரு மாதத்தில் கொடுத்துவிடுவதாக நடராஜிடம் ஹக் உறுதி கூறி தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+