காரில் சைரன்: திருமாவளவன் மீது புது வழக்கு
காஞ்சிபுரம்:
காரில் சிவப்பு சுழல் விளக்குடன் வந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காஞ்சிபுரத்திற்கு திருமாவளவன் வந்தபோது, அவரது காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. தான் ஒரு முக்கியப்பொறுப்பில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை பொதுமக்கள் நம்ப வைப்பதற்காக இவ்வாறு அவர்வந்துள்ளார்.
இது அரசு விதிமுறைகளுக்குப் புறம்பானது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மணி கொடுத்த புகாரின் பேரில் பெரிய காஞ்சிபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் பிரசாரம்:
இதற்கிடையே காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன் 10 நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலைச் சிறுத்தைகளின் தனித்தன்மையை நிரூபிக்க இடைத் தேர்தலில்போட்டியிடுகிறோம். மற்ற சமூகத்தினர் எங்களுக்கு எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவுள்ளோம்.
பாமகவுடனான எங்களது உறவு தமிழ் மொழி உணர்வினால் ஏற்பட்டது. எனவே தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களுடனான எங்களது உறவுபாதிக்கப்படாது.
மே 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை 5 நாட்கள் காஞ்சிபுரத்திலும், 5 நாட்கள் கும்மிடிப்பூண்டியிலும் நான் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளேன்.
இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவப் படைகளை பயன்படுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications