திமுகவின் புகார் பொய்: போலீஸ் அறிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றது
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல் வன்முறை தொடர்பான மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முடிவுக்குகொண்டு வந்து பைசல் செய்தது. திமுக வேட்பாளர்கள் கூறிய புகார்கள் அனைத்தும் பொய் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம் மற்றும் நாகப்பன் ஆகியோர், அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்களைதேர்தல் பணியாளர்களாக நியமிக்க தடை விதித்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலின்போது பெரும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர்களும், திமுகவினரும் மாறி மாறி மறியலில்ஈடுபட்டனர். இதையடுத்து திமுக வேட்பாளர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அவர்களது புகாரை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், அமைச்சர்கள் சாலை மறியல் செய்ததைகண்டித்தனர். திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை பதிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இந் நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அதில், திமுக தரப்பில் கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறிய நீதிபதிகள், போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,திமுகவினர் கூறிய புகார்கள் பொய்யானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை உண்மையானதா, இல்லையாஎன்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இருப்பினும், புகார்தாரர் (திமுக வேட்பாளர்கள்) சம்பந்தப்பட்ட அமைப்பிடம் (நீதிமன்றத்தில்) முறையிட்டு நிவாரணம் பெறஇந்த அறிக்கை தடையாக இருக்காது என்று கூறி வழக்கை பைசல் செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications