சென்னை: புதிய விமான நிலையத்திற்கு 1,500 ஏக்கர் நிலம்- ஜெ
சென்னை:
சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையத்தை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்அளித்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தனக்குக் கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் டெல்லிக்கு சென்றிருந்தபோது பிரதமரைச் சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தகோரிக்கை மனுவைக் கொடுத்தேன்.
அதில், மும்பை, கொல்கத்தா நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்துவதைப்போல, இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக உள்ள சென்னை நகரிலும் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையத்தைஅமைக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தேன்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சென்னையில் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க பரிந்துரைசெய்திருப்பதையும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில்,எனது கோரிக்கைப்படி, சென்னையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது உள்ள விமான நிலையத்துக்கு அருகே 1475.5 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும், இந்த நிலத்தைஇலவசமாகவும், வில்லங்கம் இல்லாமலும் தமிழக அரசு தர வேண்டும் என்றும் படேல் கூறியுள்ளார்.
இதையடுத்து பிரதமருக்கு நன்றி தெரிவித்து நான் கடிதம் எழுதியுள்ளேன். அதேபோல, திட்டத்திற்குத் தேவைப்படும் 1,500 ஏக்கர்நிலம், வில்லங்கம் இல்லாமல் இலவசமாகவே இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்கப்படும் என்றும் முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications