அத்வானி மீது கருணாநிதி கடும் தாக்கு
சென்னை:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக சதி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், குஜராத் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்றும் அவர்பதவியில் நீடிக்கக் கூடாது என்று கூறி பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சிகள் நிாடாளுமன்றத்தைப்புறக்கணித்து வருகின்றன.
பாஜக ஆட்சிக்காலத்தில் எத்தனையோ ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. அவற்றுக்குப் பொறுப்பேற்று அப்போதைய ரயில்வேஅமைச்சர் ராஜினாமா செய்தாரா?
ஒரு அமைச்சரின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட வரலாறு இதற்கு முன்நடந்துள்ளதா?
அதே போல குற்றப் பத்திரிக்கை தாக்கலானவுடன் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டப் பிரிவாவது சொல்கிறதா?
அப்படி ஒரு சட்டம் இருந்தால், யார் வேண்டுமானாலும் அமைச்சர் மீது வழக்கு கொடுக்கலாம். அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம். அதன் மூலம் எந்த அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய முடியுமே.
ஒரு அமைச்சர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத வரை அவர் பதவி விலக வேண்டிய அவசியமோ, அவரை பதவி நீக்கம் செய்யவேண்டிய கட்டாயமோ இல்லை. குற்றப் பத்திரிக்கை தாக்கலானாதால் லாலுவை பதவி விலகச் சொல்லி நெருக்கடி தரும்பாஜகவின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அவர்கள் விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்காகவே பதவியைராஜினாமா செய்ய வேண்டுமா என்று பாஜக தலைவர்கள் எதிர் வாதம் செய்யவில்லையா?.
லாலு விவகாரத்தை வைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைக்க அத்வானி போன்றவர்கள் திட்டமிடுகிறார்கள்.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர்களை மிகக் கேவலமாகவும், இழிவாகவும் பேசுகிறார். அதைசபாநாயகரும் அனுமதிக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர்க்ளை பேச விடுவதே இல்லை.
ஆனால் இதற்கு நேர் மாறாக நாடாளுன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகவும் சுதந்திரமாக செயல்படஅனுமதிக்கப்படுகிறார்கள். போராட்டத்தைக் கைவிடுமாறு நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கோரிக்கை விடுத்தும்அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் இது போன்ற முயற்சிகளை உயரிய தலைவர்களான வாஜ்பாய் போன்றவர்கள் ஆதரிப்பதுநாகரீகமான செயல் அல்ல.
மத்திய ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் பாஜக கூட்டணியினர் செய்து வரும் இந்த சதி கண்டனத்துக்குரியது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications