திருச்சியில் போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு: ரெளடிகள் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி அருகே போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி விட்டு ரெளடிக் கும்பல் தப்பி ஓடியது.

திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவன் பட்டரை சுரேஷ். அப்பகுதியில் மிகப் பெரும் ரெளடி. இவனும், இவனதுகூட்டாளிகள் 5 பேரும் சேர்ந்து, குள்ளம்பாடி முருகேசன் என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்குத்தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து குள்ளம்பாடி பகுதியில் போலீஸார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலம்பாக்கம் என்றஇடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர்.

அவர்களை தடுத்த நிறுத்திய போலீஸார், சுரேஷும், அவனது கூட்டாளிகளும்தான் மோட்டார் சைக்கிளில் வந்தது என்பதைஅறிந்து அவர்களைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது ரவுடிக் கும்பல், போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் மண்ணச்சநல்லூர்இன்ஸ்பெக்டர் கண்ணன் கத்தில் காயம் ஏற்பட்டது. வெடிகுண்டுத் தாக்குதலை பொருட்படுத்தாமல் போலீஸார் துணிச்சலுடன்அக் கும்பலைப் பிடிக்க முயற்சித்தனர்.

இதில் சங்கர் என்பவன் மட்டும் சிக்கினான். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

திருச்சியில் சமீப காலமாக ரெளடிகளுக்குள் அடிக்கடி மோதல் நடப்பதும், இதன் அடிப்படையில் கொலைகள் நடப்பதும்அதிகரித்து வரும் நிலையில் போலீஸார் மீது ரவுடிக் கும்பல் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+