வெளிநாடுகளில் தவிக்கும் 7,000 இந்தியர்கள்
சென்னை:
முறையான ஆவணங்கள் இல்லாமலும், மேலும் பல்வேறு காரணங்களாலும், வெளிநாடுகளில் 6,944 இந்தியர்கள் சிக்கித்தவிக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறையின் குடிபெயர்வுப் பிரிவு இயக்குனர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சரியான ஆவணங்களுடன் செல்லாமல் பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்குசென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கித் தவிப்போரின் எண்ணிக்கை 6,944 ஆகும். இவர்களில்செளதி அரேபியாவில் மட்டும் 1,082 பேர் சிக்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வேலை வாய்ப்பு ஏஜென்டுகள் குறித்த புத்தகத்தை வெளியுறவுத் துறைவெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகள், அங்கீகாரம் பெறாத போலி ஏஜென்டுகள் குறித்த முழுவிவரம் அடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.
இதுபோல ஏமாற்றுதல்களைத் தவிர்க்க, ஏஜென்டுகள் மூலம் விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.
தவறான நபர்கள் மூலம், தவறான ஆவணங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு சிறையில் சிக்கிக் கொள்வதிலிருந்துஇளைஞர்களைக் காக்கும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது என்றார் பார்த்தசாரதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications