கதிரவன் அண்ணன் மீது கஞ்சா வழக்கு இல்லை: அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவனின் சகோதரர் அலங்கார் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்படவில்லைஎன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்ரூவர் ரவி சுப்ரமணியத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கூறி சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், அவரது சகோதரர்அலங்கார், ரவுடி அகிலன் உள்ளிட்டோர் மீது கஞ்சா வழக்கு, கொலைச் சதித் திட்ட வழக்கு ஆகியவற்றை செங்கல்பட்டுபோலீஸார் போட்டுள்ளனர்.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி அலங்கார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுநீதிபதி எம்.தணிகாச்சலம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கே.துரைசாமி, அலங்கார் மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைதொடக்க கட்டத்தில் உள்ளது. விசாரணையின் போது தான் அலங்காரின் மீதான புகார் குறித்து உண்மை தெரிய வரும்.தற்போதைக்கு அவர் மீது போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லைஎன்றார்.

இதையடுத்து மே 3ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி தணிகாச்சலம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+