திமுகவுக்கு ஜால்ரா: மாறனுக்கு அத்வானி திடீர் பாராட்டு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், மிகச் சிறப்பாக பணியாற்றியதாக பாஜக தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் தமிழக பாஜக பிரதிநிதிகள் மாநாட்டை அத்வானி நேற்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் முன்னணி கட்சிகள் இரண்டும் தற்போது பாஜகவை மத வாத கட்சி என்று கூறி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் முன்பு நம்முடன் ஆட்சியில் பங்கு பெற்றவையாகும். ஆனால் இப்போது நாம் மதவாத கட்சியாகத் தெரிகிறோம்.
தோஹா உலக வர்த்தக மாநாட்டில் அவரது திறமையான வாதம், இந்தியாவுக்கும், வளரும் நாடுகளுக்கும் மிகப் பெரியநன்மையை செய்தது. அது வியத்தகு சாதனையாகும்.
இந்தியன்-திராவிடன், தேசியம்-மாநிலம் என்றெல்லாம் முன்பு விவாதம் நடந்தது. நான் திராவிட கலாச்சாரத்தை மதிக்கிறேன். பழம் பெருமை வாய்ந்த கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். மதுரைக்கு சென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லாமல் இருக்க முடியுமா?
கேரளாவில் கருணாகரன் வெளியேறி விட்டார். ஏற்கனவே வெளியேறிய சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஆனால் பாஜக வலுவுடனும், ஒற்றுமையாகவும் இருக்கிறது.
சங்கராச்சாரியாரை இந்த அரசு மிக மோசமாக நடத்தி வருகிறது. அதை பகிரங்கமாக எதிர்த்தது பாஜக மட்டுமே. வழக்கை நான் விமர்சிக்கவில்லை, சட்டம் தனது கடமையை செய்யட்டும்.
நான் ஒரு இந்து என்று கூறிக் கொண்டால் அது மதவாதமா? ஆனால் ஒரு கிறிஸ்தவரோ, முஸ்லீமோ தான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டால் தவறில்லையாம். இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது என்ன கண்ணோட்டம்?
மதச்சார்பற்ற தன்மையை நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது ஆன்மீகத்தை மறுப்பதாக இருக்கக் கூடாது.
தமிழகத்தில் உள்ள இரண்டு (திமுக, அதிமுக) கட்சிகளில், யார் ஆட்சிக்கு வந்தாலும் மற்றவர்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். இதிலிருந்து தமிழகம் மீள வேண்டும்.
அதற்கு பாஜகவுக்கு சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இதன் மூலம் தமிழகஅரசியலில் புதிய கலாச்சாரம் உருவாகும் என்று அத்வானி பேசினார்.
2வது நாளான இன்று பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications