புதிய விமான நிலையம்: திமுகவே காரணம்- மீண்டும் கூறுகிறார் கருணாநிதி
சென்னை:
சென்னையில் புதிதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையத்திற்கு திமுகவே காரணம் என்று கருணாநிதி மீண்டும் கூறியுள்ளார்.
சென்னையில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையத்தை அமைக்க பிரதமர்மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தான்சென்னையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வர் என்ற வகையில் தான் கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தார்.
இன்றும் கருணாநிதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் புதிய விமான நிலையம் வருவதற்கு திமுக தான் காரணம் என்று மீண்டும்வலியுறுத்தியுள்ளார். முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது 1998ம் ஆண்டு முதல்வர் என்ற முறையில் அப்போதயபிரதமர் வாஜ்பாய்க்கு புதிய விமான நிலையம் அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதினேன்.
கடந்த வருடம் சென்னையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் முயற்சியில் இதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக மார்ச் மாதமே செய்திகள்வந்தன.
எனவே புதிய விமான நிலையம் வருவதற்கு தான் தான் காரணம் என்று ஜெயலலிதா கூறுவது தவறு. திமுக தரப்பிலும்,எதிர்க்கட்சிகள் தரப்பிலும் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் இது. இது குறித்து திமுக கூட்டங்களில் பேசி மக்களுக்குதெரிவிக்க வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications