காவிரி: தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை- அய்யர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழகத்துக்கு உரிய நியாயமான காவிரி நீர் மறுக்கப்பட்டு வருகிறது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர்அய்யர் கூறியதை கர்நாடக முதல்வர் தரம்சிங் மறுத்துள்ளார்.
தரம்சிங்குடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மணிசங்கர் அய்யர், தமிழகத்துக்கு காவிரி விஷயத்தில் நீதி கிடைக்கவில்லைஎன்றார்.
காவிரி விஷயத்தில் கர்நாடகத்தின் நலனை விட்டுத் தரவே மாட்டோம் என்றார்.
அப்போது உடனிருந்த முன்னாள் பிரதமரும் கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வருபவருமான தேவேகெளடா கூறுகையில், காவிரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யும் தைரியமான முடிவைஎங்கள் கூட்டணி அரசு எடுத்துள்ளது.
கர்நாடக காவிரிப் படுகையில் உள்ள விவசாயிகளின் நலனைக் காப்பதில் எனக்கு தரம்சிங் துணை நிற்கிறார் என்றார் கெளடா.












Click it and Unblock the Notifications