குண்டர் சட்டத்தில் "உள்ளே போகிறார் ஜெயலட்சுமி?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலட்சுமி மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் 6 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

ஜெயலட்சுமி விவகாரத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு போலீஸுக்கு புதிய தெம்பு வந்துள்ளது. குற்றப்பத்திரிகையில் ஜெயலட்சுமி மீது 6 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஜெயலட்சுமி தரப்புக்கு கலக்கத்தைஏற்படுத்தியுள்ளது.

இதனால் மேல் விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்தை அணுக ஜெயலட்சுமி தரப்பு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சிபிஐ குற்றப் பத்திரிகையில் உள்ள 6 மோசடி வழக்குகள் தவிர ஜெயலட்சுமி மீது நகைக்கடை அதிபர் முருகவேல் எஸ்.எஸ்.காலனி போலீஸில் கொடுத்த நகை மோசடி வழக்கு, வழக்கறிஞர் அழகர்சாமி தொடர்ந்த வழக்கு மற்றும் தாராபுரம் நீதிமன்றத்தில்தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கு ஆகிய வழக்குகளும் உள்ளன.

எனவே இந்த வழக்குகளில் தான் கைது செய்யப்படக்கூடும் என்று ஜெயலட்சுமிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால்உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இது தவிர போலீஸ் பாதுகாப்பு வாபசாக இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்க மதுரை நீதிமன்றத்தை அணுகவும் அவர் முடிவுசெய்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க ஜெயலட்சுமியால் நகை, பணத்தை இழந்தவர்கள் அவற்றை திரும்பப் பெறுவதற்காக போலீஸில் புகார் செய்யமுடிவெடுத்துள்ளார்கள். ஜெயலட்சுமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று அவர்கள் மனு கொடுக்கவும்தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது சிபிஐ நினைத்தால் ஜெயலட்சுமியை கைது செய்யலாம்.மேலும் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில்

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜெயலட்சுமியை கைது செய்ய போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது. வழக்கின் தன்மையைப் பொறுத்துஅவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+