காஞ்சிபுரம்: வேட்பாளர்கள் பின்னணி
காஞ்சிபுரம்:
மைதிலி திருநாவுக்கரசு - அதிமுக
காஞ்சிபுரம் தொகுதியின் உறுப்பினராக இருந்து மரணமடைந்த திருநாவுக்கரசுவின் மனைவி மைதிலிதான் அதிமுக சார்பில்இப்போது போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்.
கணவர் திருநாவுக்கரசுவின் வழக்கறிஞர் பணியிலும், பின்னர் அமைச்சரானவுடன் மக்கள் பணியிலும் துணை நின்றவர் மைதிலி.மைதிலி திருநாவுக்கரசுக்கு குழந்தைகள் கிடையாது. இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ளஎய்ச்சூர் கிராமம்.
பி.யூ.சி வரை படித்துள்ள மைதிலிக்கு அரசியல் புதிதல்ல என்பதும், தொகுதி மக்களின் குறிப்பாக பெண்களின் அன்பைப்பெற்றவர் என்பதாலும், இவரது வெற்றி உறுதி என்று அதிமுக வட்டாரம் திட்டவட்டமாக நம்புகிறது.
காஞ்சிபுரம் தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பதால் பெண்களின் வாக்குகளைக் கவரஅதிமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பி.எம்.குமார் - திமுக
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பி.எம்.குமாரை தனது வேட்பாளராக திமுக களம் இறக்கியுள்ளது. குமாரின் தந்தை முருகேசன்இத்தொகுதியில் இரண்டு முறை (1989, 1996) எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மேல ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எம்.குமார், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலாளராகஇருந்து வருகிறார். இவரது தாயார் ராணி முருகேசன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளாரக முன்புஇருந்துள்ளார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான பி.எம்.குமார், அரசு காண்டிராக்டராக இருந்து வருகிறார். திமுக சார்பில் நடந்த பலபோராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இவருக்குத் திருமணமாகி மலர்விழி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள்கிடையாது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications