கள்ள ஓட்டு போட குவிந்து வரும் தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் கள்ள ஓட்டுப் போடுவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களைகண்காணிக்க போலீஸார் இரு தொகுதிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதனால் இங்கு தேர்தல் பிரசாரம் தற்போதுசூடுபிடித்துள்ளது. தொண்டர்கள் வீடுவீடாக ஏறி இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் தனது 6 நாட்கள் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தேர்தல் பிரசாரத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இங்கு குவிந்துள்ளனர். இவர்கள்இங்குள்ள பல வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து அதிமுக, திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருப்பது காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியைமிரள வைத்துள்ளது. இவர்களின் வருகை போலீஸுக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களில் வெளிமாவட்டத் தொண்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேஇவர்களை வெளியேற்ற போலீஸார் முடிவு செய்துள்ளனர். வருகிற 5ம் தேதிக்குப் பிறகு இந்த நடவடிக்கை இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தாங்கள் உள்ளூர்க்காரர்கள் தான் என்று போலீஸாரை ஏமாற்ற வெளிமாவட்டத் தொண்டர்கள் முடிவுசெய்துள்ளனர். இதற்காக இங்குள்ள வங்கிகளில் உள்ளூர் முகவரியை கொடுத்து அக்கவுண்ட் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.இதன் மூலம் இவர்கள் தொகுதியிலேயே தங்கியிருந்து கள்ள ஓட்டுப் போடவும் வாய்ப்புள்ளது.

எனவே இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர வாக்குப்பதிவுதினத்தன்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை தடுக்க இரு தொகுதிகளின் எல்லைகளில்சோதனைச் சாவடிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+