காவிரி: மேட்டூர் அணை திறக்கப்படுவதில் இந்த ஆண்டும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டும் திட்டமிட்டபடி அணை திறக்கப்படுவதில் சிக்கல்எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை, குறுவை சாகுபடிக்காக திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பலஆண்டுகளாக இது தடைபட்டு வருகிறது. காவிரியில் கர்நாடகம் உரிய நீரைத் தர மறுப்பதால், அணையில் போதிய தண்ணீர்இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட காலத்தில் அணையைத் திறப்பது இயலாததாக உள்ளது.

இந்த ஆண்டும் குறிப்பிட்டபடி ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்படாது என்றே தெரிகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 93டிஎம்சி ஆகும். அணையில் தற்போது 19.52 டிஎம்சி தண்ணீரே உள்ளது.

தென் மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். தென் மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்தால் தான் மேட்டூர்அணையைத் திறக்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கர்நாடகம் நீரைத் தராவிட்டாலோ, தென் மேற்குப் பருவ மழை பொய்த்தாலோ அணையைத் திறப்பது இந்த வருடமும் கடினமேஎன்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+