காவிரி: ஜெவுக்கு ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் அரசியல் செய்ய நினைப்போரை வருங்கால சந்ததியினரும், தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றுகூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்குஉரிய நீரை கர்நாடகத்திடமிருந்து பெற தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்று உறுதியாகப்போராட வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழக முதல்வர் தனது பிடிவாதத்தை கைவிட்டு விட்டு கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து தண்ணீர்விடுவிக்க கோரிக்கை விட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
விரைவில் குறுவை சாகுபடியை தொடங்க வேண்டிய நிலையில் விதைப்புக்கே நீர் இல்லாமல் காவிரி டெல்டா விவசாயிகள்கவலையோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications