கி.வீரமணி திடீர் பல்டி: அதிமுகவுக்கு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சமீப காலமாக முதல்வர் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கைக் கையாண்டு வந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கி.வீரமணி மீண்டும் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார். காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அதிமுகவுக்குஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

காரணம், சங்கராச்சாரியார்கள் மீது ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கை.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் கி.வீரமணி. வீரப் பெண் என்றுஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளியவர். இதனால் திமுக தலைவர் கருணாநிதி இவரை, போயஸ் தோட்டத்து பூசாரி என்றுவர்ணித்தார்.

பாஜகவுடன் ஜெயலலிதா உறவு வைத்திருந்தபோதும், ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்து வந்தார். இந் நிலையில் யாருமேஎதிர்பாராத வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திடீர் பல்டி அடித்தார்.

பாஜக கூட்டணியை விட்டு திமுக வெளியேறியதால், அக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு தி.க. ஆதரவு அளிக்கும் என்றுஅறிவித்தார்.

இந் நிலையில் இப்போது மீண்டும் ஒரு முறை குட்டிக்கரணம் அடித்துள்ளார் வீரமணி. இம்முறை காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிதொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக வீரமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்ததற்காக ஜெயலலிதாவைப் பாராட்டுவதாகவும், அவரதுதுணிவுக்கு மதிப்பளித்து இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாகவும் வீரமணி தெரிவித்துள்ளார்.

வீரமணி தலைமையில் சென்னையில் நடந்த தி.க செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவுஎடுக்கப்பட்டது.

அக் கூட்டத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைதுக்குப் பின்னர் அதிமுக அரசுக்கு எதிராக சங்க பரிவார் அமைப்புகள் வியூகம்அமைத்து வருகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. அதைத் தடுக்க வேண்டும். அதற்காக அதிமுகவின் கரத்தைவலுப்படுத்த வேண்டியது நமது கடமை.

மேலும், கடந்த முறை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தது. ஆனால் இம்முறை பாஜகவிடமிருந்து விலகி விட்டது.எனவே வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்போம்.

இந்தத் தேர்தலினால் தமிழக அரசியல் சூழ்நிலை மாறி விடப் போவதில்லை. எனவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில்தவறில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தி.கவினர் ஈடுபட மாட்டார்கள், தேவைப்பட்டால் காஞ்சிபுரத்தில் மட்டும் தனி மேடைஅமைத்து பிரசாரம் செய்வார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதே நிேரத்தில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக்கும் தனது ஆதரவு தொடரும் என தி.க. அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+