யாராவது எங்களை மதிங்கப்பா..!!
சென்னை:
எங்களை மதிக்கும் கட்சிக்கே, மக்கள் தமிழ் தேசம் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்று கட்சியின் தலைவர் ராஜ. கண்ணப்பன்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காஞ்சிபுரம் தொகுதியில் எங்களது கட்சிக்கு 16,500 ஓட்டுக்கள் உள்ளன.கும்மிடிப்பூண்டியில் 17,000 ஓட்டுக்கள் உள்ளன. (அப்படியா?)
இப்போது நடைபெறும் இடைத் தேர்தலிலும் நாங்கள் போட்டியிடாததற்குக் காரணம் உள்ளது. இந்த எம்.எல்.ஏ. பதவி மிககுறுகிய காலமே கொண்டதாகும். எனவே நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. (இல்லாட்டி ஜெயிச்சுட்டு தான் மறுவேலை).
அப்போது ஆதரவு குறித்து முடிவு செய்வோம். எங்களை மதித்து, ஆதரவு கேட்கும் கட்சிக்கே ஆதரவு கிடைக்கும் என்றார்கண்ணப்பன்.
இதுவரை மக்கள் தமிழ் தேசம் கட்சியின் ஆதரவை திமுகவோ அல்லது அதிமுகவோ கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்ப கண்ணப்பனை நீங்க (திமுக, அதிமுக) மதிக்கலையா?












Click it and Unblock the Notifications