போயிங் சொய்ங்... ஏர்-பஸ் ஏமாற்றம்
டெல்லி:
ஏர் இந்தியாவுக்கு விமானங்கள் வாங்குவதில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்டவர்களின் நெருக்கடிக்கு இந்தியா பணிந்துள்ளதாகபிரான்ஸ் கருதுகிறது.
ஏர் இந்தியாவுக்கு 50 விமானங்கள் வாங்கவுள்ளது இந்தியா. இதற்காக அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பிய தயாரிப்பானபிரான்சின் ஏர் பஸ் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியது.
இந் நிலையில் சமீபத்தில் போயிங்கிடம் இருந்தே 50 விமானங்களையும் வாங்க இந்தியா முடிவு செய்துவிட்டது. சுமார் ரூ. 29,000 கோடிமதிப்புள்ள இந்த ஆர்டரைப் பெற அமெரிக்கா பல திகிடுதித்தங்களை செய்தது.
சமீபத்தில் உலகிலேயே மிகப் பெரிய பயணிகள் விமானத்தை வெற்றிகரமாக சோதனையிட்ட ஏர் பஸ் நிறுவனம், தனக்கு ஏர் இந்தியாவின்ஆர்டர் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
இதையடுத்து விமான டெண்டர் விஷயத்தில் இந்தியா நியாயமாக நடந்து கொள்ளவில்லை என ஏர் பஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந் நிலையில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் டொமினிக் ஜிரார்ட் இன்று கூறுகையில்,
இந்த விவகாரத்தில் வர்த்தகத்தையும் மீறிய ஏதோ சில சக்திகள் செயல்பட்டுள்ளன. இந்த சக்திகளின் நெருக்கடியால் தான் போயிங்விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அடுத்து இந்திய விமானப் படைக்கு 126 போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளன. அதில், எங்கள் நாட்டின் மிராஜ் போர் விமானங்களும்போட்டியில் உள்ளன. அப்போதாவது எங்கள் நவீன விமானங்களை இந்தியா பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.
போயிங்கைவிட ஏர் பஸ் விமானங்கள் தரத்திலும், விலையிலும், மற்ற விஷயங்களிலும் உயர்வானவை என்பதால், எங்களுக்கு இந்தியஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
ஏர் இந்தியாவுக்கு அவசரமாக 50 விமானங்கள் தேவை. ஆனால், அப்படி விரைவாக விமானங்களைத் தயாரித்து வழங்கும் நிலையில்போயிங் இல்லை. ஏர் பஸ் விமானங்கள் இந்திய விமானிகளுக்கு மிகவும் பழக்கமானவை.
இதனால் எங்களுக்கு ஏர் இந்தியாவின் ஆர்டர் கிடைக்கும் என நினைத்து நாங்கள் விமானத் தயாரிப்புக்குக் கூட தயாரானோம்.
ஆனாஸ், இத்தனை சாதகமான விஷயங்கள் இருந்தும் ஏர் பஸ்ஸைவிட்டு விட்டு போயிங் பக்கமாக இந்தியா சாய்ந்ததற்கு, ஏதோ காரணம்உள்ளது என்றார் ஜிரார்ட்.
இந்திய விமானப் படைக்கு எப் 16 அல்லது எப் 18 ரக விமானங்களைத் தரத் தயார் என அமெரிக்கா சமீபத்தில் அறிவித்ததுகுறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவுடன் மோதல் வந்தால் விமானங்களுக்கான உதிரிப் பாகங்களை தர மாட்டோம் என அமெரிக்காமிரட்டவும் வாய்ப்புள்ளதால், அந் நாட்டிடம் போர் விமானங்கள் வாங்குவதில் பெரும் சிக்கல் உள்ளது.
அதே நேரத்தில் பிரான்ஸ் தரப்பில் இந்தியாவுக்கு போதிய ஒத்துழைப்பு இருந்தே வருகிறது. மிக நவீன சுகோய் விமானங்களுக்குஅடுத்தபடியாக இந்தியாவிடம் உள்ள தொழில்நுட்பத்தில் மிக உயர்வான விமானங்கள் பிரான்சின் மிராஜ் 2000 விமானங்கள் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications