இடைத் தேர்தல்: முழு அளவில் மத்திய பாதுகாப்பு?
டெல்லி:
காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் போலீசார் உதவியுடன் அரசு இயந்திரத்தை அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு படைபலத்தை திமுகவும் குவித்துள்ளதால், பெரும் வன்முறை வெடிப்பதைத் தவிர்க்க இடைத் தேர்தலில் முழு அளவில் மத்தியபாதுகாப்புப் படைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
போலீசார், அதிமுக கூட்டணியை முறியடிக்க எல்லா நடவடிக்கைகளிலும் இறங்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின்தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் பல மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் இந்தத் தொகுதிகளில்குவிந்து வருகின்றனர்.
அதே போல அதிமுகவும் ஆட்களை குவித்து வருகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் கிலி பரவ ஆரம்பித்துள்ளது.
வழக்கமாக இடைத் தேர்தலில் மத்திய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்பட மாட்டார்கள். இருப்பினும் தமிழக இடைத்தேர்தலில் தேவைப்பட்டால் முழு அளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரை பயன்படுத்துவதுகுறித்து பரிசீலித்து வருகிறோம்.
வாக்குச் சாவடிக்குள் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் பொருட்டு சாவடிக்குள் மத்திய போலீஸாரை நிறுத்துவது குறித்து,சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் பார்வையாளரும், தலைமைத் தேர்தல் அதிகாரியும் முடிவு செய்வார்கள்.
ஏற்கனவே தமிழகத்திற்குக் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்புப் பார்வையாளரும் சென்றுள்ளார்.தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை இவர்கள் உறுதி செய்வார்கள்.
பிரச்சினைக்குரிய வாக்குச் சாவடிகளில், வாக்குப் பதிவை வீடியோ படம் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்கிருஷ்ணமூர்த்தி.
இந் நிலையில் இடைதேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் 300 பேர் இன்று தமிழகம் வந்தனர்.
சென்னை வந்திறங்கிய இந்தப் படையினர் காஞ்சி, கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மத்தியப் படைகளின் வருகை அதிமுகவுக்கு பெரும் கவலையும் திமுகவுக்கு ரொம்பக் குஷியும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகபோலீஸ் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளது திமுக.












Click it and Unblock the Notifications