கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு
சென்னை:
பாஜக கூட்டணியில் இருந்து சடாரென விலகிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.
பாஜக கூட்டணியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்ட நாயுடு, அதன் பின் கருணாநிதியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
பாஜக கூட்டணியில் இருந்தபோது வெளியில் இருந்து ஆதரவளித்தாலும் ஆட்சியில் மிக செல்வாக்குடன் விளங்கினார் நாயுடு.
இப்படி நாயுடுவை ரொம்பவே மதித்து வந்தது பாஜக. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தெலுங்கு தேசத்துக்குஅடுத்தடுத்து சரிவுகள் தொடர்ந்தன. மக்களவை, சட்டசபைத் தேர்தல் ஒன்றாக மண்ணைக் கவ்வினார் நாயுடு.
அது முதலே பாஜகவில் இருந்து விலகுமாறு நாயுடுவுக்கு இரண்டாம் மட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும் நெருக்கடி தந்துவந்தனர். இதில் முடிவெடுக்காமல் இருந்து வந்த நாயுடு, நேற்று முன் தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புறக்கணிப்புமுடிவையும் மீறி நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது கட்சியை பங்கேற்க வைத்தார்.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த பாஜக, எங்கள் தெலுங்கு தேசம் இல்லை என்று அறிவித்தது.
இவ்வாறு சொல்லாமல் கொள்ளாமல் பாஜகவுக்கு கும்பிடு போட்டு அதிர்ச்சி தந்துள்ள நாயுடு, இன்று மத்திய அமைச்சர் பாலுவின்இல்லத் திருமணத்தில் பங்கேற்க சென்னை வந்தார். அப்படியே கருணாநிதியையும் சந்தித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. பின்னர் முரசொலி மாறன் வளாகம், கலைஞர் கருவூலம் ஆகியவற்றையும்சுற்றிப் பார்த்தார்.
பின்னர் பேசிய நாயுடு, இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசவேவந்தேன். இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அண்ணா அறிவாலயத்தில் இருப்பது போன்ற ஒரு கருவூலத்தைஅமைத்ததில்லை என்றார்.
இச் சந்திப்பு குறித்து திமுக தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பாஜக கூட்டணியை விட்டு நாயுடு விலகியதை மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவருமான ஜோதிபாசு பாராட்டியுள்ளார். தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைக்க இடதுசாரிகள் தயார் என இன்று அவர்அறிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications