இந்தியா ஒளிர்ந்தது.. ரூ.63 கோடி இழந்தது
டெல்லி:
தங்களது ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது (India Shining) என்ற கோஷத்தை கிளப்பிவிட்டு அதை நாடு முழுவதும் விளம்பரம் செய்யபாஜக ஆட்சியில் முறைகேடாக அரசுப் பணம் ரூ. 63 கோடி வீணடிக்கப்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்புகார் கூறப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வந்தபோது இந்தியா ஒளிர்கிறது, பீல் குட் பேக்டர் போன்ற கோஷங்களை திடீரெனகிளப்பிவிட்டது பாஜக. இந்தியா திடீரென எங்கோயோ போய்விட்டது என்றரீதியில் விளம்பரங்களை வெளியிட்டனர்.
இதற்காக கோடிக்கணக்கான அரசுப் பணம் செலவிடப்பட்டது. நாட்டின் முன்னணி டிவி விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கை விளம்பரநிறுவனங்களைப் பிடித்து டிசைன் டிசைனாக விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த விளம்பரங்கள் மூலம் இந்தியா ஒளிர்ந்தது. இதன்மூலம் பலனடைந்தவர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிக்கைஅதிபர்களும் தான். இந்தியாவில் வறுமை காணாமல் போய், செல்வமும் வளமும் தழைப்பதாக ஒரு மாயையை உருவாக்க முயன்றனர்.
இந் நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கான மத்திய அரசின் கணக்குத் தணிக்கையை கம்ட்ரோலர் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜகவின் கட்சி விளம்பரமான இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்துக்கா மத்திய அரசின் நிதி ரூ. 63.23 கோடி சட்ட விரோதமாகசெலவிடப்பட்டதாக கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செலவுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பாஜக அரசு பெறவில்லை என்றும், இத்யாதி செலவுகள் என்ற பெயரில் இந்தசெலவை சேர்த்துவிட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு ஹோட்டல்கள் போணி:
அதே போல தனியார்மயமாக்குகிறோம் என்ற பெயரில் பல அரசு நிறுவனங்களை பாஜக அரசு விற்றது. குறிப்பாக அரசுக்குச் சொந்தமானசுற்றுலாத்துறை ஹோட்டல்கள் அடிமாட்டு விலைக்கு வேண்டியவர்களுக்கு விற்கப்பட்டன.
இதையும் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மும்பை ஜூகு சென்டார், மும்பை விமான நிலைய சென்டார் ஹோட்டல் ஆகியவைஅரசுக்கு எந்தவிதமான லாபமும் இல்லாத வகையில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதே போல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள ஹோட்டல்களும் வேண்டியதொழிலதிபர்களுக்கு அள்ளித் தரப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications