மீண்டும் லாக்- அப் சாவு: போலீஸ் மீது கல்வீச்சு- தடியடி, களேபரம்
சென்னை:
சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார். இதனால்ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் காவல் நிலையம் மீதும், போலீஸார் மீதும் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அயனாவரம் சோலை தெருவைச் சேர்ந்தவர் பழனி. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி ரோஸி. இவர்களது சுதா, மகன் அய்யப்பன்.
அப்போது அங்கு பழனியும், ரோஸியும் சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுகைலகலப்பில் முடிந்துள்ளது.
இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் வேணு புகார் கொடுத்தார். இதன் பேரில் பழனியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
போலீசாரின் காவலில் இருந்த பழனி மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
காவல் நிலையத்தில் பழனி மயங்கி விழுந்தாகவும், இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் போலீசார் வழக்கம் போல் விளக்கம் தந்தனர்.
போலீஸ் காவலில் பழனி மர்மமாக இறந்த செய்தி அறிந்ததும் அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன் கூடி போலீஸாருக்கு எதிராகபோராட்டத்தில் குதித்தனர். போலீஸார் அடித்ததால்தான் பழனி இறந்து விட்டதாக அவர்கள் புகார் கூறினர்.
நேரம் ஆக ஆக பழனியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, கல்லவீச்சில் இறங்கினர். காவல் நிலையம் மீதும், போலீஸார் மீதும் சரமாரியாககற்களை வீசித் தாக்கினர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இரவு 11 மணி வரை இந்த களேபரம் நீடித்ததால் அப்பகுதியே பெரும்பரபரப்பாக காணப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications