ஆதிகேசவன் மீது பாய்கிறது குண்டாஸ்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:


மோசடி மன்னன் ஆதிகேசவன் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்படவுள்ளார். இதற்கான நடவடிக்கையில் சென்னைகாவல்துறை ஈடுபட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மோசடி மன்னன் ஆதி கேசவன், ரூ. 50 கோடி மோசடி வழக்கில் கைதாகி சிறையில்இருக்கிறார். 6 நாள் போலீஸ் காவலில் எடுக்ப்பட்ட ஆதி கேசவன் விசாரணைக்குப் பின்னர் நேற்று மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டார்.

இந் நிலையில் ஆதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். மகாகவி பாரதி நகர் காவல்நிலையத்தில் ஆதிகேசவன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. சதித் திட்டம் தீட்டியதுஉள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கை தூசி தட்டி எடுத்துள்ள போலீஸார், அதையும் இந்த நிதி மோசடியையும் இணைத்து அவரை குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கமிஷ்னருடன் மனைவி, மகள் சந்திப்பு:

இதற்கிடையே, தனது கணவன் மோசடிச் செயல்களுக்கு அவருடன் இருந்தவர்களே காரணம். அவர்கள்தான் தனது கணவரைதவறான வழியில் கூட்டிச் சன்று விட்டார்கள். எனவே எனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடாதீர்கள் என்றுகோரி ஆதி கேசவனின் மனைவி சாந்தி, மகள் அனிதா ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் மனுகொடுத்துள்ளனர்.

தங்களது வழக்கறிஞருடன் நடராஜை சந்தித்த அவர்கள், விசாரணைக்கு ஆதிகேசவன் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்றும்,குண்டர் சட்டத்தின் கீழ் மட்டும் அவரை கைது செய்து விட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டாளி ஜெயவீரன் கைது:

இதற்கிடையே, தலைமறைவான ஆதியின் வலதுகரமான ஜெயவீரன் மைசூரில் தனிப்படை போலீசாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆதியின் அனைத்து மோசடிகளையும் நன்கு அறிந்தவர் இவர் என்பதால் இவரது கைது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.சென்னை கொண்டு வரப்படட ஜெயவீரனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

போலீசாரிடம் விசாரணை:

இந் நிலையில் ஆதியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வட சென்னையின் உதவிகாவல்துறை ஆணையாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+