விபசாரம்: டிவி நடிகை, உதவி இயக்குனர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய டிவி நடிகை உட்பட 6 பேர் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை நகரில் பெருகி வரும் விபசாரத்தை கட்டுப்படுத்த போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான வீடுகள், லாட்ஜ்களில் திடீர் திடீரென போலீஸார் சோதனை நடத்தி விபசாரக் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

இந் நிலையில் சென்னை சின்மயா நகரில் விபசார தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகசாமி தலைமையில் போலீஸார் திடீர்சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த மலையாள திரைப்பட உதவி இயக்குனர் மகேஷ் (வயது36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் இருந்த தெலுங்கு டிவி நடிகை நிஷா (வயது 20) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதே போல போலீஸார் நடத்திய மற்றொரு சோதனையில் ஆடிட்டர் அலுவலகம் என்ற போர்வையில் விபசாரம் நடத்தி வந்தவிஜயவாடாவை சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வீட்டில் இருந்த ஜோதி, கவிதா ஆகியோர்மீட்கப்பட்டனர்.

கிழக்கு கடற்கரையிலுள்ள விடுதிகளில் மும்பை மற்றும் ஆந்திராவில் பார்களில் நடனமாடுபவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியசீனு என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதே போல கம்பெனி வேலைக்கு இளம்பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியமேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+