ஓடிப்போன டிஎஸ்பிக்கு மீண்டும் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:


மனைவியுடன் டிஜிபியை சந்தித்த டிஎஸ்பி மணிரத்னம் (மொட்டை அடித்திருப்பவர்)

ஓடிப் போய் பின்னர் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள சேலம் மாவட்டம் ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்னம், டிஜிபி அலெக்சாண்டர்முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நாளை அவர் பணியில் சேருகிறார்.

ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்னம், இரு வாரங்களுக்கு முன் சேலம் பஸ் நிலையத்தில் தனது ஜீப்பையும் துப்பாக்கியையும்விட்டுவிட்டு காணாமல் போனார். பின்னர் கடிதம் முலம் எஸ்.பி பொன் மாணிக்கவேல் மீது சரமாரியான புகார்களை அவர்சுமத்தியிருந்தார்.

இந் நிலையில் மணிரத்னத்தை சத்தியமங்கலம் அருகே டி.எஸ்.பி. மோகன் நிவாஸ் தலைமையிலான தனிப்படை கண்டுபிடித்துமீட்டது. இதைத் தொடர்ந்து விசாரணைக்காக மணிரத்னத்தை சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.

அவருடன் மனைவி தனலட்சுமியும் அழைத்து வரப்பட்டுள்ளார். டிஜிபி அலெக்சாண்டர் முன்பு இன்று காலை மணிரத்தினம்ஆஜர்படுத்தப்பட்டார். தனலட்சுமி தவிர சேலம் புதிய எஸ்.பி. ஆறுமுகம், ஈரோடு எஸ்.பி, மற்றும் டி.எஸ்.பி. மோகன் நிவாஸ்ஆகியோரும் அலெக்சாண்டர் முன் ஆஜராகினர்.

பின்னர் மணிரத்னத்திடம் டிஜிபி அலெக்சாண்டர் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவரை மீண்டும் பணியில் சேரஅலெக்ஸாண்டர் அனுமதி அளித்ததாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து துறைரீதியிலான விசாரணைக்கும் அலெக்ஸாண்டர் உத்தரவிட்டுள்ளார்.

மணிரத்னத்தின் புகார் காரணமாக எஸ்பியாக இருந்த பொன். மாணிக்கவேல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போதுகாத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர் கூறுகையில்,

14 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு டிஎஸ்பி மணிரத்தினத்திடம் சொன்னேன். அதைஅவர் செய்யவில்லை. உங்கள் வீட்டுக் குழந்தையாக இருந்தால் இப்படி விட்டுவிடுவீர்களா என்று கேட்டேன். இது தப்பா?

மணிரத்னம் ஒரு கோழை. நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுபவன். சேலத்தில் கள்ளச் சாராயத்தை ஒழித்தவன். காவல்நிலையங்களுக்கு வந்த கோடிக்கணக்கான லஞ்சத்தைத் தடுத்தவன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தூண்டுவிட்டுத் தான்மணிரத்னம் இவ்வாறு நடந்து கொண்டார் என்றார் நேர்மைக்குப் பெயர் போன பொன் மாணிக்கவேல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+