காஞ்சி: அதிமுகவின் "அன்பளிப்பு: வாக்காளர்கள் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:

இடைத்தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிமுகவினரின் அன்பளிப்புகள்குவியத் தொடங்கிவிட்டன.

ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு கிராமத்தையும் பாக்கி வைக்காமல் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியை அதிமுகவினர் முடித்து விட்டனர்.

இதற்கு அடுத்த கட்டமாக தொகுதியில் தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் செல்வாக்கு மிக்க நபர்களைசந்தித்து அவர்களை தங்கள் வலைக்குள் விழ வைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் இறங்கியுள்ளனர்.

சாலை அமைக்க, குழாய் போட, மின்விளக்கு போட உடனடி ஆர்டர்கள் தரப்படுகின்றன. மேலும் தங்கள் பகுதி கோவில்கள்,சங்கங்களுக்கு என்று பிரமுகர்கள் பணம் கேட்டால் உடனே அள்ளித் தருகின்றனர் அமைச்சர்களும் வாரியத் தலைவர்களும்

வீட்டில் 10 ஓட்டு இருக்கிறதா?. ரூ. 1,000 வரை தருகின்றனர். இதனால் பல ஏழைபாழைகள் வீடுகளிலும் ரூ. 500 காந்திதாத்தாவின் சிரிப்பொலி கேட்க ஆரம்பித்துள்ளது. காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம்கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆட்டோ டிரைவர்களில் இருந்து, பஸ் கண்டக்டர், டீக் கடைக்காரக்கள் வரை எல்லாதரப்பிலும் சொல்கிறார்கள்.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் சமீபத்தில் கிரிக்கெட் குழுக்களுக்கு கிரிக்கெட் பேட், பந்துகள், ஸ்டம்ப், கையுறை உட்பட பலபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோனேரிகுப்பம் உட்பட சில பகுதிகளில் பெண்களுக்கு "காஞ்சிபுரம் சேலைகள்வழங்கப்பட்டன.

இதனால், ஆளும் கட்சியினர் பிரசாரத்திற்கு வந்தால் ஏதாவது கண்டிப்பாக கிடைக்கும் என்று இப்பகுதி மக்களிடையே பலத்தநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினரை பக்கத்து மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்துள்ள அதிமுகவினர் அவர்களைவைத்து பெண்களை வளைத்து வருகின்றனர். வங்கிக் கடனில் இருந்து மானிய உதவி வரை பல வித வாக்குறுதிகளை இந்த சுயஉதவிக் குழுப் பெண்கள் மூலமாக வாக்காளர்களுக்குத் தரப்படுகின்றன.

அதிமுகவினர் அள்ளித் தருவதால் திமுகவினரிடமும் சில பகுதிகளில் பொது மக்கள் என்ன கொடுப்பீர்கள் என்று தயங்காமல்கேட்க ஆரம்பித்துவிட்டனர். எங்களிடம் பணம் இல்லை என்று பஞ்சப்பாட்டு பாடும் திமுகவினரிடம், போன ஆட்சியில்சம்பாதித்ததை எடுத்து தரவேண்டியது தானே என்று பதிலுக்கு பதில் பேசி அதிர்ச்சியடைய வைக்கின்றனர். இதனால் திமுககரைவேட்டிகள் நொந்து போயுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+