லெஸ்பியன்: பார்வையற்ற மனைவியை கொன்ற கணவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தோழியுடன் லெஸ்பியன் உறவு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது பார்வையற்ற மனைவியை அடித்துக்கொன்றார்.

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் திருமலை. ஊனமுற்றவரான இவர், டெலிபோன் பூத் வைத்துள்ளார். இவரது மனைவிசுடரொளி. கண் பார்வையற்றவரான இவர், மத்திய கலால் வரி அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம் போல இருவருக்கும்இடையே தகராறு வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருமலை, சுடரொளியை இரும்புக் கம்பியால் தலையில்அடித்துள்ளார். இதில் சுடரொளி இறந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், திருமலையை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணைநடத்தியதில் அவர் கூறிய தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியளித்தது.

பார்வையற்ற தன்னுடைய மனைவி சுடரொளிக்கும், அவரது தோழி ஒருவருக்கும் லெஸ்பியன் உறவு இருந்தது தான் இந்தகொலைக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

திருமலை போலீஸில் அளித்த வாக்குமூலம்: எனக்கும் சுடரொளிக்கும் திருமணம் ஆகி 15 மாதங்கள் கடந்து விட்டது. அவள் ஒருநாள் கூட என்னுடன் சந்தோஷமாக இருக்கவில்லை. தினமும் கட்டாயப்படுத்தித் தான் அவளை ஆசைக்கு இணங்க வைக்கவேண்டியிருந்தது.

இதற்கு என்ன காரணம் என்று நான் விசாரித்த போது சுடரொளிக்கும், அவளது தோழி ஒருவருக்கும் லெஸ்பியன் உறவு இருப்பதுதெரிய வந்தது. அந்த தோழி அடிக்கடி வீட்டிற்கு வருவாள். அதை நான் கண்டித்தேன்.

அவள் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது தோழிக்கே செலவழித்தாள். இதனால் எனக்கும், சுடரொளிக்கும் அடிக்கடி தகராறுஏற்படும்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இருவரும் வீட்டில் இருந்தோம். அப்போது ஆசைக்கு இணங்க சுடரொளியை அழைத்தேன்.ஆனால் வழக்கம் போல அவள் மறுத்தாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

எனக்கும் உபயோகமில்லாதவள் வேறு யாருக்கும் பயன்படக் கூடாது என்று நினைத்து அவளை அடித்துக் கொன்றேன் என்றுகூறியுள்ளார்.

கண் பார்வையற்ற ஒரு பெண் மீது கணவர் லெஸ்பியன் உறவு குற்றம் சாட்டி கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+