அமைச்சர் தளவாய் மீதான செக்ஸ் புகார்: விசாரணைக் கமிஷன் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், பெண் டாக்டரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுவது குறித்து விசாரணைநடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 நபர் கமிஷனை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. தன்னிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம்தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு தான் உடன்பட மறுத்ததால், ஆத்திரமடைந்து, நாகப்பட்டனத்திற்கு தன்னை இடமாற்றம்செய்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு கோமதி பரபரப்புப் புகார் தெரிவித்தார்.

ஆனால், டாக்டர் கோமதியின் புகாரை போலீசார் வாங்காமல் இழுத்தடித்தனர். பின்னர் ஒருவழியாய் புகாரை வாங்கினாலும்நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவல் துறை தூங்கி வந்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தை கோமதி அணுகினார். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரினார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி சிவசுப்பிரமணியம் இன்று தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில்,

சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது மனுதாரர் கூறியுள்ள புகார்களுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகத்தெரியவில்லை. இதேபோல பலமுறை பலர் மீது மனுதாரர், புகார் கூறியிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதை நினைவில்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், மனித உரிமை ஆணையத் தலைவருக்கு மனுதாரர் எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதிகள் மீதே அவர் குறை கூறியுள்ளார்.இது கண்டனத்துக்குரியது. இதுபோல எதிர்காலத்தில் அவர் நடந்து காள்ளக் கூடாது.

மனுதாரர், அமைச்சர் மீது கூறியுள்ள புகார்களில் உண்மை இருக்கிறதா என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிமருதமுத்து தலைமையில் முன்னாள் டிஜிபி ரோஷன்லால் ஹண்டே, பெண் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் அடங்கியவிசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது.

இந்தக் கமிஷன் தனது விசாரணையை செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் முடித்து, அறிக்கையை தமிழக அரசின் தலைமைச்செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+