ஜெயலட்சுமிக்கு கைது வாரண்ட்: திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

ஏ.டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜெயலட்சுமிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் கைதுவாரண்ட் பிறப்பித்துள்ளது.

போலீஸார் மீது சரமாரியான புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையின் முடிவு ஜெயலட்சுமிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஜெயலட்சுமி செய்த மோசடிகள் மற்றும் போலீஸ் பெயரைக் கூறி அவர் செய்த மோசடிகளின் அடிப்படையில் மதுரை தலைமைக்குற்றவியல் நீதிமன்றத்தில் 4 வழக்குகளை சிபிஐ தொடர்ந்து அதில் குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்தது.

இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 420ன் கீழ் ஜெயலட்சுமி மீதே சிபிஐ சார்பில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்தக் குற்றப்பத்திரிகைகளில் ஜெயலட்சுமி தவிர இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலட்சுமி உள்ளிட்டோருக்கு நேற்று குற்றப் பத்திரிக்கை நகல்கள்வழங்கப்படுவதாக இருந்ததது. இதற்காக ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

ஆனால் நீதிபதி அய்யாசாமி வராததால் வழக்கு ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் நேற்று அவருக்குகுற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படவில்லை.

திண்டுக்கல்லில் ஏ.டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி இறந்த வழக்கில் மட்டும் நேற்று அவருக்கு குற்றப் பத்திரிகை நகல்வழங்கப்பட்டது.

கைது வாரண்ட்:

திண்டுக்கலில் ராஜசேகர் ஏடிஎஸ்பியாக இருந்த போது தான் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். ராஜசேகருடன்ஜெயலட்சுமிக்கு தொடர்பு இருந்ததால் தான் அவரது மனைவி தற்கொலை செய்தார் என விசாரணையில் தெரியவந்தது. இந்தவழக்கில் ஏ.டி.எஸ்.பி.ராஜசேகர் முதல் குற்றவாளியாகவும், ஜெயலட்சுமி 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிசுமதி, ஜெயலட்சுமிக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் ராஜசேகரையும், ஜெயலட்சுமியையும் அடுத்த மாதம் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

போலீஸ் பாதுகாப்பு கோரி மனு:

இதற்கிடையே, போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு மீது மதுரை தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் இன்று விசாரைண நடந்தது.

அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஜெயலட்சுமியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.தேவைப்பட்டால் அவர் தனியார் பாதுகாப்பு படையினரை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தப் பதில் மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவை என்று ஜெயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் கோரியதால், வழக்கைவருகிற 17ம் தேதி வரை ஒத்திவைத்து நீதிபதி அய்யாச்சாமி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+