For Daily Alerts
Just In
பிஇ, எம்பிபிஎஸ்: இன்று மாலை நுழைவுத்தேர்வு முடிவுகள்
சென்னை:
தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (12ம் தேதி) மாலை வெளியாகிறது.
தமிழகத்தில் உள்ள பொறியியல், மருத்துவம், விவசாயம், மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய பட்டப் படிப்புகளில் சேர அண்ணாஅண்ணா பல்கலைக் கழகம் நடத்திய இந்தத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இன்டராக்டிவ் ஸ்கீரிலும் பார்க்கலாம்.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமிஅறிவித்துள்ளார்.
Story first published: Thursday, May 12, 2005, 5:30 [IST]