ஐஏஎஸ்: தமிழக மாணவர்கள் பெரும் சாதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்த ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 54 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய அளவில் 422 பேர் வெற்றிபெற்றுள்ள நிலையில் அதில் சுமார் 9ல் ஒரு இடத்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர்.

இந்த 54 பேரில் 4 பேர் பெண்கள் ஆவர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 25 வகையான மத்திய அரசுப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி நடந்தது. கடந்த 5ம் தேதி நேர்காணல் தேர்வு நடந்தது.

இதையடுத்து அனைத்துப் பணிகளுக்கும் சேர்த்து 422 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருநெல்வேலிதியாகராயபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2001ம் ஆண்டில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் 137வது இடத்தைப் பிடித்த இவர் இந்திய ரயில்வே சர்வீஸ் (ஐஆர்டிஎஸ்)பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது நாகராஜன், ஆந்திர மாநிலம் குண்டூரில் ரயில்வே போக்குவரத்து மேலாளராகபணியாற்றி வருகிறார்.

தொடர்ந்து முயற்சி எடுத்து மீண்டும் தேர்வெழுதி 2004ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வில் முதலிடத்தை அவர் பிடித்துள்ளார்.இதன்மூலம் ரயில்வே சர்வீசில் இருந்து ஐஏஎஸ் சர்வீசுக்கு நாகராஜன் மாறுவார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் பிட்ஸ் பிலானியில் பிஇ படித்தவர். கல்வியை முடித்தவுடன் விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத்தில்பணியில் சேர இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதில் சேராத நாகராஜன், இந்திய நிர்வாகப் பணியில் சேர முடிவெடுத்துதேர்வெழுதி ஐஆர்டிஎஸ் அதிகாரியானார்.

இவரது தந்தை சீனிவாசன் நெல்லை வண்ணாரப்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலக கோட்ட மேலாளராக உள்ளார். தாயார்வாணியும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மேற்பார்வையாளராக உள்ளார்.

அதே போல சென்னையச் சேர்ந்த மணிவண்ணன் 19வது ரேங்க் பெற்றுள்ளார். திருச்சியைச் சேர்ந்த ஜெசிந்தா லாசரஸ் 27வதுரேங்க்கையும், சங்கீதா 32வது ரேங்க்கும் பெற்றுள்ளனர். தேறிய மற்ற தமிழக மாணவர்கள் விவரம்:

ஆர். ரங்கராஜன் (46வது ரேங்க்), ரஞ்சித் குமார் (47), ராஜு (64), ஜானகி (87), மாணிக்கராஜ் (113), ஆலிஸ் வாஸ் (122),யுவராஜ் (143), பாலமுருகன் (163), கண்ணன் (177),

வத்சலா (199), பாலாஜி (205), ஹபீப் (213), ரங்கராஜன் (235), பிரகாஷ் (273), ஸ்ரீதர் (285), எழிலரசன் (290),கோபாலகிருஷ்ணன் (292), சிவசங்கரன் (301), பாண்டியன் (305), அலெக்ஸ் பால் மேனன் (307), ஸ்ரீதர் (313),

கணேசன் (325), வெள்ளியங்கிரி (328), ரொனால்ட் ரோஸ் (329), நந்தகுமார் (334), செல்வமணி (347), கவிதா (351),பத்மநாபன் ( 359), பரமசிவம் (384), இளையராஜா (387), சரவணன் (409).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+