பிஇ, எம்பிபிஎஸ்: நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்வெளியாகியுள்ளன.

இந்த முடிவுகளை www.annauniv.edu/tnpcee2005
www.tn.nic.in/tnpcee2005 ஆகிய இணையத் தளங்களில் காணலாம்.

இந்தத் தேர்வை 1,64,341 பேர் எழுதினர். நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் மேலும் 14 வெப்சைட்டுகளிலும் வெளியாயின.

நுழைவுத் தேர்வு முடிவுகள் குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இம் முறை மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நுழைவுத் தேர்வில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் மட்டும் 1,051 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயல்பியல்பாடத்தில் 20 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆனால், கணிதப் பாடத்தில் ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை. நுழைவுத் தேர்வில் கணிதப் பாடத்தின் கேள்வித்தாளில் ஒரே ஒரு கேள்வியில் அச்சுப்பிழை இருந்தது. இதனால் அந்த கேள்வியை எண்ணிக்கையிலிருந்து நீக்கிவிட்டோம்.மீதமுள்ள கேள்விகளை மட்டும் கணக்கிட்டு மதிப்பெண்கள் போட்டோம்.

சென்னை முகில் நகரைச் சேர்ந்த டி.ஏ.வி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜி.ஸ்ரீனிவாஸ் பிரசாத்,பொறியியல் பாடத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

மருத்துவப் பாடத் தேர்வில் 11 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களது விவரம்:

மதுரையைச் சேர்ந்த சார்லஸ், மகேஷ், நாமக்கல்லைச் சேர்ந்த அருண் குமார், கரூரைச் சேர்ந்த அனிதா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்ததிவ்யாலட்சுமி, ஈரோட்டைச் சேர்ந்த மேரி ஸ்டெல்லா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுந்தர வடிவேல், பாலமுரளிதரன், ஜகதீஷ்கண்ணா, திவ்யாம்பிகை, அஜீதா ஆகியோர்.

நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கம்ப்யூட்டர்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்திற்கு சென்று பதிவு எண்களைக் கூறி மதிப்பெண் விவரத்தைப் பெறலாம்.

மருத்துவ, இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படும்.சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள கவுன்சிலிங் மையங்களிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவங்கிக் கிளைகளிலும், கரூர் வைஸ்யா வங்கிக் கிளைகளிலும் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.

முதலில் மருத்துவக் கல்வியில் சேர கவுன்சிலிங் நடத்தப்படும். இதன் பின்னரே பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்நடக்கும்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 4ம் தேதி துவங்கும் என்றார் பாலகுருசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+