காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் நாளை இடைத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்&கும்மிடிப்பூண்டி:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) வாக்குப் பதிவு நடக்கிறது.

இதற்காக காஞ்சியில் 235 வாக்குச் சாவடிகளும், கும்மிடிப்பூண்டியில் 196 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்க 431சாவடிகளிலும் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடக்கிறது.

முறைகேடு, கள்ள ஓட்டைத் தடுக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய தேர்தல்ஆணையம் முடிவெடுத்துள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மத்திய அரசு அதிகாரிகளே தேர்தல் அதிகாரிகளாக இருப்பர். அதே போல அனைதது வாக்குச்சாவடிகளிலும் மாநில போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளது. இதன்மூலம்அதிமுகவினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

காஞ்சியில் அதிமுகவின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசின் மனைவி மைதிலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவின்சார்பில் பி.எம்.குமார் களத்தில் உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் உள்பட இங்கு மொத்தம் 20 பேர் போட்டியில் உள்ளனர்.

அதே போல கும்மிடிப்பூண்டியில் அதிமுகவின் சார்பில் விஜயக்குமார் போட்டியில் உள்ளார். திமுகவின் சார்பில் வெங்கடாசலபதிபோட்டியிடுகிறார். இவர்கள் தவிர மேலும் 14 பேர் களத்தில் உள்ளனர்.

கும்மிடிப்பூண்டில் 45 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார்நிறுத்தப்படுவர்.

இரு தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்கள் அந்தந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு இன்றேஅனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் காஞ்சி தொகுதியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கலைக் கல்லூரிக்குகொண்டு செல்லப்படும். அதே போல கும்மிடிப்பூண்டி வாக்குப் பதிவு எந்திரங்கள் ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில் வைக்கப்படும். இங்குமத்தியப் படை பாதுகாப்பு போடப்படும்.

வரும் 16ம் தேதி (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு இந்த இரு இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அடுத்த சில மணிநேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.

இதற்கிடையே கே.ஜே. ராவின் அதிரடியையும் தாண்டி காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் கள்ள ஓட்டு போடுவதற்காககுவிக்கப்பட்ட கரைவேட்டிகள் தொகுதிக்கு வெளியே, பக்கத்து தொகுதிகளில் பதுங்கியிருந்து நிலைமையயை கண்காணித்து வருகின்றன.

தேர்தல் விதிப்படி, சந்தேகத்துக்கிடமான வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் வெளியேறாமல்தொகுதிக்கு அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் பதுங்கியுள்ளனர்.

இவர்கள் மீண்டும் தொகுதிக்குள் நுழையாமல் தடுக்க இரு தொகுதிகளின் எல்லைகளும் நேற்று மாலையே சீல் வைக்கப்பட்டு விட்டன.காஞ்சிபுரம் தொகுதி எல்லையில் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டியில், பெருவாயல்,தாமரைப்பாக்கம், மஞ்சங்கரணை, ஆரம்பாக்கம், மாதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரகண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகள் வழியாக தொகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. வெளியூர்காரர்கள் ஊடுறுவாமல்தடுக்கும் பொருட்டு போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலை முறையாக நடத்த கே.ஜே.ராவ், முனியப்பா ஆகியோர் தலைமையில் சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தேர்தலை நேரில் கண்காணிக்கவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+