கனடாவுக்கு மீண்டும் ஏர் இந்திய விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

டொரோன்டோ:

கனிஷ்கா விமான விபத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட கனடா விமான சேவையை ஏர்-இந்தியா நாளை மீண்டும்துவக்குகிறது.

கடந்த 1985ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று டொரன்டோ நகரிலிருந்து மும்பைக்கு ஏர்-இந்தியாவின் கனிஷ்கா விமானம்புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 329 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 329 பயணிகளும்இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஜய்ப் சிங் பக்ரி மற்றும் ரிபுட்மன் சிங்மாலிக் ஆகிய 2 சீக்கியர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 20 வருடங்களாக கொலம்பிய உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த விமான விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 சீக்கியர்களும் விடுதலை செய்யப்பபட்டனர்.

விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு கனடாவுக்கு தனது விமான சேவையை ஏர்-இந்தியா நிறுத்திவைத்திருந்தது.

இந் நிலையில் நாளை முதல் கனடாவுக்கு மீண்டும் விமான சேவையை ஏர்-இந்தியா துவங்குகிறது. டெல்லியில் இருந்துபுறப்படும் இந்த விமானம் பர்மிங்ஹாம் வழியாக டொரன்டோ செல்லும்.

இந்த முதல் விமானத்தில் சிறுபான்மை ஆணைய தலைவர் திரிலோச்சன் சிங், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.கில்,ரீட்டா சோதி மற்றும் பல்வந்த் சிங் ராமுவாலியா ஆகியோரும் பயணம் செய்கின்றனர்.

நாளை மாலை இந்த விமானம் டொரன்டோ விமான நிலையத்தை அடையும். 20 வருடங்களுக்குப் பிறகு வரும் இந்த முதல்விமானத்தை வரவேற்க டொரன்டோவிலுள்ள இந்தியர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+