ராவ் நடத்திக் காட்டிய நேர்மையான தேர்தல்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:


கும்மிடிப்பூண்டியில் வாக்களிக்கும் திமுக வேட்பாளர் வெங்கடாசலபதி

முந்தைய இடைத் தேர்தல்கள் போலில்லாமல் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளில் இன்று மிகஅமைதியாகவும், விதிமீறல்கள் இல்லாமலும் வாக்குப் பதிவை நடத்திக் காட்டினார் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப்பார்வையாளர் கே.ஜே.ராவ்.

வாக்குச் சாவடிகளை யாராவது கைப்பற்ற முயன்றால் உடனே சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதோடு, இது தொடர்பானஉத்தரவுகளைப் பிறப்பிக்க வருவாய் அதிகாரிகளுக்கு அதிகாரத்தையும் வழங்கியது தேர்தல் ஆணையம்.

தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் இரண்டு தொகுதிகளிலும் மத்திய துணை ராணுவப் படையினரையும்பாதுகாப்புப் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியது. கடந்த இடைத் தேர்தல்களில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் போலபோலீஸ் எஸ்பிக்கள் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கும்மிடிப்பூண்டியில் வாக்களிக்கும் அதிமுக வேட்பாளர் விஜயகுமார்

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தமிழக போலீசாருடன் மத்திய ரிசர்வ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.தமிழக போலீசார் கையில் லத்திகளுடன் நிற்க, ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளுடன் மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டனர்.

தொகுதியில் 4 பேருக்கு மேல் கூட்டமாகச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் காஞ்சியில் 235 வாக்குச் சாவடிகளிலும்,கும்மிடிப்பூண்டியில் 196 வாக்குச் சாவடிகளிலும் கூட்டமோ, பரபரப்போ இல்லாமல் மிக அமைதியாக தேர்தல் நடந்தது.

வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு முன்பே மக்கள் வரிசையாக வந்து நின்றுவிட்டனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும்அதிக அளவில் வாக்களித்தனர்.


காஞ்சியில் வாக்களிக்கும் திமுக வேட்பாளர் குமார்

வாக்குச் சாவடிகள் தவிர முக்கிய இடங்களிலும் சாவடிகளுக்கு வெளியிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். மத்தியப்படையினரின் கமாண்டர்களும் வாகனங்களில் சுற்றி வந்தவண்ணம் இருந்தனர். அதே போல வெளியாட்கள் நுழைந்துவிடாமல்இருக்க தொகுதி எல்லைகளில் தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

வாக்குச் சாவடிகளுக்கு வெளியே ஒரு பந்தல் போட்டுக் கொண்டு, அதில் டேபிள், சேர் போட்டு அமர்ந்து கொண்டு வாக்களிக்கவருபவர்களிடம் ஸ்லிப் எழுதித் தந்து கடைசி நேரத்தில் ஓட்டு வேடையாடுவார்கள். ஆனால், இம்முறை அதற்கும் அனும்திஅளிக்க கே.ஜே.ராவ் தடைபோட்டுவிட்டார். இதனால் டேபிள் சேரோடு கிளம்பி வந்த திமுக, அதிமுகவினரை போலீசார் விரட்டிவிட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் வரகாலதாமதம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குப் பதிவு 40 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் அங்கு சிறிது சலசலப்புஏற்பட்டது.


காஞ்சியில் வாக்களிக்கும் அதிமுக வேட்பாளர் மைதிலி

காஞ்சிபுரத்தில் நசரத்பேட்டை, பிள்ளையார்பாளையம் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் மின்னணு எந்திரங்கள் மக்கர்செய்தன. இதனால் அங்கு வாக்குப் பதிவு 10 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது.

வாக்குச் சாவடிக்குள் வருபவர்களிடம் வாக்களிக்கத் தேவையான அடையாள அட்டையைப் பார்த்த பின்னரே மத்தியப்படையினரும் போலீசாரும் உள்ளே அனுமதித்தனர்.

வாக்குச் சாவடிகளின் நுழைவாயிலில் இரண்டு பேர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் வாக்குச் சாவடியின் உள்பகுதியைப் பார்வையிடும் வகையிலும், மற்றவர் வாக்காளர்களை நோக்கி நிற்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிரவாக்குச் சாவடிக்கு உள்ளேயும் ஒருவர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்.


காஞ்சியில் வரிசையில் வாக்களிக்கும் மக்கள்

மத்தியப் படை பாதுகாப்பு இருப்பதால் இதுவரை அராஜகக் கும்பல் எதுவும் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் வரவில்லை. கடந்தஇடைத் தேர்தல்கள் போலில்லாமல் மக்கள் மிகவும் பாதுகாப்பான உணர்வோடு வாக்களிக்க முடிந்தது. இதனால் ஏராளமானமக்கள் வாக்களித்தனர்.

முறைகேடு, கள்ள ஓட்டைத் தடுக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் வீடியோவில் பதிவுசெய்தது.

ஒரு வாக்குப் பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால் காஞ்சியில் தொகுதியில்அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இரண்டு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு மொத்தம் 20 பேர்போட்டியில் உள்ளனர்.


கும்மிடிப்பூண்டியில் வரிசையில் வாக்களிக்கும் மக்கள்

16 பேர் போட்டியிடும் கும்மிடிப்பூண்டியில் ஒரே மின்னணு எந்திரமே வைக்கப்பட்டது.

மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனடியாக மாற்றுவதற்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் உப இயந்திரங்கள்கொடுக்கப்பட்டன. இதுதவிர பழுது நீக்கும் பொறியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகங்களில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

வெயிலுக்கு முன்னதாகவே வாக்களித்துவிடும் நோக்கில், காலை 10 மணிக்கு முன்பே ஏராளமானவர்கள் வாக்களிக்கவந்துவிட்டனர். வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.


மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை கொண்டு வந்த வேன்கள்

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் மஞ்சக்கரணை வாக்குச் சாவடியில் தனது மனைவியுடன் வந்துகாலையிலேயே வந்து ஓட்டு போட்டார். திமுக வேட்பாளர் வெவங்கடாசலபதி பூவலம்பேடு அரசு நடுநிலைப் பள்ளியில்வாக்களித்தார்.

காஞ்சியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசின் மனைவி மைதிலி, காமராஜர் சாலை அந்திராசன்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். திமுக வேட்பாளரான பி.எம்.குமார், மேல ஒட்டிவாக்கம் ஆதி திராவிடர்நல தொடக்கப் பள்ளியில் தனது மனைவி மலர்க்கொடியுடன் வந்து வாக்களித்தார்.

கும்மிடிப்பூண்டில் 45 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் போலீசார்நிறுத்தப்பட்டிருந்தனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் காஞ்சி தொகுதியின் வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கலைக்கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அதே போல கும்மிடிப்பூண்டி வாக்குப் பதிவு எந்திரங்கள்பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த இரு இடங்களிலும் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு இந்த இரு இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அடுத்த சிலமணி நேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.

தேர்தலை முறையாக நடத்த கே.ஜே.ராவ், முனியப்பா ஆகியோர் தலைமையில் சிறப்புப் பார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தலை நேரில் கண்காணித்தனர். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ராவ் தமிழகத்திலேயேதங்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+