இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவு அருகே இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆகஇருந்த இந்த நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதில் சேதம் மற்றும் பலியானவர்களின் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இப்பகுதிகளில் வீடுகளில் இருந்தவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளஅலறியடித்து ஓடியதாக டிவி தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் இப்பகுதியில் மீண்டும் சுனாமிஅச்சம் உருவாகியுள்ளது.
இதனால் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஏராளமான மக்கள் மலைப்பகுதியை நோக்கி ஓட்டமெடுத்தனர்.
ஆனால் இங்குள்ள வானிலை இலாகா அதிகாரிகள் கூறுகையில் நில நடுக்கம் சக்தி வாய்ந்தது தான். ஆனால் மீண்டும் சுனாமிவருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
தெற்கு நியாஸ் பகுதியை சேர்ந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், நில நடுக்கத்தில் வீடுகள் ஏதும் சேதமடையவில்லை.ஆனால் நில நடுக்கம் ஏற்பட்டதை நன்றாக உணரமுடிந்தது.
வடக்கு சுமத்ராவிலுள்ள சிபோல்கா மாவட்டத்தில் பல வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள்இப்போதும் பீதியில் உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications