பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகின்றன.

தமிழ்நாடு முழுவதும் இவ்வருடம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்மதிப்பிடும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்து விட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியாகின. இதை முன்னிட்டு அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட பொறியியல் அட்மிஷன் குறித்த அட்டவணையில் பிளஸ் 2 முடிவுகள் 18ம் தேதிவெளியிடப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் தொழிற்படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் 19ம் தேதி பிளஸ் 2 முடிவுகள்வெளியாக உள்ளன.

பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஓரிரு நாட்களில்முடிவடையும்.

தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள்உடனடியாக விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியல்கம்ப்யூட்டரில் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

காலை 10 மணிக்கு மேல் முடிவுகள் வெளியாகும். ஒரே சமயத்தில் தேர்வு முடிவுகளை அறிய இணையதளங்களை பலர் பார்க்கமுயல்வதால் இணையதளங்கள் செயல் இழக்க நேரிடுகிறது. இதனால் இவ் வருடம் 10க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்குதேர்வு முடிவுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+