ராவுக்கு பக்தர்கள் கொடுத்த லட்டு !

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவுக்கு,திருப்பதி சென்று விட்டுத் திரும்பிய பக்தர்கள் லட்டு கொடுத்து அசத்தினர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, ராவ், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதிரடியாகசோதனை நடத்தினார். வாகனப் பரிசோதனையிலும் ஈடுபட்டார்.

பெரியபாளையம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்,எதற்காக கும்மிடிப்பூண்டிக்குள் வந்துள்ளீர்கள் என்று ராவ் விசாரித்தார்.

அதற்கு அவர்கள் தாங்கள் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவதாக கூறினர். அத்தோடு நிற்காமல் லட்டு ஒன்றையும்எடுத்து ராவிடம் நீட்டினர். இதையடுத்து சிரித்துக் கொண்டே ஒரு லட்டை எடுத்து வாயில் பிய்த்துப் போட்டுக் கொண்ட ராவ்,லட்டை தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கும் கொடுத்து அந்தக் காரை செல்ல அனுமதித்தார்.

தொடர்ந்து வந்த கார்களில் அவர் சோதனை நடத்திய போது, நாங்களும் திருப்பதியிலிருந்து வருவதாக கூறினர். அப்படியா, சரிலட்டு எங்கே என்று அவர்களிடம் ராவ் கிடுக்கிப்பிடி போட்டபோது, லட்டு இல்லையே என்று அவர்கள் கூறினர்.

இதைக் கேட்ட ராவ்,என்னை ஏமாற்ற முடியாது, வேகமாக தொகுதியை விட்டுப் போய் விடுங்கள் என்று எச்சரித்து விட்டுச்சென்றார்.

பின்னர் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்ற ராவ், சுயேச்சை வேட்பாளர் லோகநாதனின் காரைப் பறிமுதல் செய்துஅனுப்பினேனே, அந்தக் கார் எங்கே என்று கேட்டார்.பின்னர் ராவை, காவல்துறை அதிகாரிகள், கார் நிறுத்தப்பட்டிருந்தஇடத்திற்குக் கூட்டிச் சென்று காட்டினர்.

காருக்குள் எட்டிப் பார்த்த ராவ், உள்ளே ஒரு தண்ணீர் கேன் இருந்ததே அது எங்கே என்றார். அதற்கு அதிகாரிகளிடமிருந்துசரியான பதில் இல்லை. இதனால் கோபமடைந்த ராவ், பறிமுதல் செய்த பொருட்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவேண்டாமா, தண்ணீர் கேன்களை யார் எடுத்துச் சென்றது என்று கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+