வண்டி வண்டியாய் மண்ணைக் கவ்விய திமுக
காஞ்சிபுரம் - கும்மிடிப்பூண்டி:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். இரு தொகுதிகளிலும் திமுக மண்ணைக் கவ்வியது.
காஞ்சிபுரம் மற்றும் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. காஞ்சியில் 70 சதவீதமும்,கும்மிடிப்பூண்டியில் 76 சதவீத வாக்குகளும் பதிவாயின.
இத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் காஞ்சியில் திமுகவும் கும்மிடியில்அதிமுகவும் முன்னணியில் இருந்தன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட போது அதிமுகவே இரு இடங்களிலும் முன்னிலைபெற்றது.
காஞ்சிபுரம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை 14 மேஜைகளில் நடைபெற்றது. மேஜைக்கு, ஒரு மேற்பார்வையாளரும், ஒருஉதவியாளரும் இருந்தனர். மொத்தம் 27 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. கும்மிடிப்பூண்டி வாக்குகள் 14 சுற்றுக்களாகஎண்ணப்பட்டன.
கும்மிடிப்பூண்டியில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் 27,162 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வெங்கடாசலபதி தோற்றார்.
அதே போல காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 17,648 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.
பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தேசியலீக் என பெரும் படையைத் திரட்டிக் கொண்டு மிக நம்பிக்கையுடன் தேர்தலில்போட்டியிட்ட திமுக பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பெருமளவில் பணபட்டுவாடா செய்ததாக பரவலாக புகார்கள் இருந்தாலும், தேர்தல் நேர்மையாகவே நடந்து முடிந்தது.
தேர்தல் கமிஷனின் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவின் நேரடிக் கண்காணிப்பில் தேர்தல் மிக அமைதியாகவும் முறையாகவும்நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications