வங்கி ஏஜெண்ட்டை கொலை செய்த அதிமுக புள்ளி
சேலம்:
சேலத்தில் வங்கி கடன் வசூல் செய்யும் ஏஜெண்ட் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் அதிமுக பிரமுகருக்குதொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 27). காதல் திருமணம் செய்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும்,6 மாத கைக் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில் ராமமூர்த்தி நேற்று முன்தினம் இரவு வீட்டில் சென்னை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நேற்று காலைஅவர் சேலம் சிவாயநகர் ரோட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணைநடத்தினர்.
கொலையுண்ட ராமமூர்த்தி திடகாத்திரமான உடல் அமைப்பைக் கொண்டவர். எனவே அவரை ஒருவரால் கொலை செய்திருக்கமுடியாது என்று போலீஸார் கருதுகின்றனர். எனவே இந்தக் கொலையை குறைந்தபட்சம் 3 பேர் கொண்ட கும்பல் தான்செய்திருக்க முடியும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் கடனை திருப்பி வாங்குவதில் ராமமூர்த்தி மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வார் என்றும்அதில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிமுக பிரமுகருக்கு தொடர்பு?:
அந்த வகையில் சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியிலுள்ள அதிமுக பிரமுகர் ஒருவரின் உறவினருக்கும், ராமமூர்த்திக்கும் சமீபத்தில்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் ஒரு ரெளடி பட்டாளத்துடன் ராமமூர்த்தியின் வீட்டுக்கு வந்துமிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
எனவே அதிமுக பிரமுகர் தான் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். எனவேகொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸார் கூறுகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications