வாக்குப் பதிவில் பெண்களை விஞ்சிய ஆண்கள்!
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள், எந்த வாக்குச் சாவடியில் அதிக வாக்குகள் பதிவானது,எங்கு குறைந்த வாக்குப் பதிவு என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.
இரு தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம் என்றபோதிலும், அதிக அளவில் ஓட்டுப் போட்டது ஆண் வாக்காளர்கள்தான்.
மொத்த வாக்காளர்கள்: 2,35,598
பதிவான வாக்குகள்: 1,64,393
ஆண்கள்: 83,678
பெண்கள்: 80,717
மொத்த வாக்குப் பதிவு சதவீதம்: 69.78
ஆண் வாக்காளர் சதவீதம்:73.15
பெண் வாக்காளர் சதவீதம்: 69.78
கும்மிடிப்பூண்டி:
மொத்த வாக்காளர்கள்: 1,93,325
பதிவான வாக்குகள்: 1,47,031
ஆண்கள்: 74,449
பெண்கள்: 72,582
மொத்த வாக்குப் பதிவு விகிதம்: 76.05 சதவீதம்
ஆண் வாக்காளர் விகிதம்: 79.71 சதவீதம்
பெண் வாக்காளர் விகிதம்: 72.64 சதவீதம்
காஞ்சிபுரம் தொகுதியில், 3 வாக்குச் சாவடிகளில் 90 சதவீதத்திலிருந்து 91 சதவீதம் வரையிலான வாக்காளர்கள் ஓட்டுப்போட்டுள்ளனர். 16 வாக்குச் சாவடிகளில் 85 முதல் 89.92 சதவீதம் வரையிலான வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்.
23 வாக்குச் சாவடிகளில் 80.32 முதல் 84.95 சதவீதம் வரையிலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 36 வாக்குச் சாவடிகளில்,75 முதல் 79.83 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 38 வாக்குச் சாவடிகளில் 70 முதல் 74.93 சதவீத வாக்காளர்கள் ஓட்டுப்போட்டுள்ளனர்.
80 வாக்குச் சாவடிகளில் 60 முதல் 69.96 சதவீதம் வாக்காளர்களும், 30 வாக்குச் சாவடிகளில் 50 முதல் 59.82 சதவீதம்வாக்காளர்களும், 8 வாக்குச் சாவடிகளில் 41.32 முதல் 48.72 சதவீதம் வரையிலான வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.
காஞ்சிபுரம் தொகுதியிலேயே அதிகபட்சமாக, கோளிவாக்கம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தான்வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு 921 வாக்காளர்களில், 841 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 91.31 சதவீதம் பேர்வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள அந்திரசன் மேல் நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் தான் குறைந்த அளவிலான வாக்குகள்பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 1,350 வாக்காளர்களில் 319 பேர் மட்டுமே அதாவது 41.32 சதவீதம் பேர் மட்டுமேவாக்களித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் அன்னதான காக்கவாக்கம் வாக்குச் சாவடியில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்குள்ளமொத்த வாக்காளர்கள் 433 பேரில் 409 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதாவது 94.46 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
குறைந்தபட்ச வாக்குப் பதிவு, பழைய கும்மிடிப்பூண்டி வாக்குச் சாவடியில் பதிவாகியுள்ளது. இங்குள்ள 1,108 வாக்காளர்களில்526 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். பதிவான வாக்கு சதவீதம் 47.41 ஆகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications