பிஇ விடைத்தாள் மோசடி: 5 கல்லூரி நிர்வாகிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!
சென்னை:
பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 5 கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும்முதல்வர்களுக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 109 போலி விடைத் தாள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 40 மாணவர்களை அடையாளம் காணும் பணியிலும் பிடிக்கும் பணியிலும் போலீஸார்தீவிரமாக இறங்கியுள்ளனர். இந் நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூகரிளின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, கிரசன்ட் பொறியியல் கல்லூரிஉள்பட சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 5 தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரி நிர்வாகிகள், முதல்வர்கள் ஆகியோரைவிசாரணைக்கு வருமாறு கூறி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும் மாணவர்களைத் தேடிப் பிடிக்க செங்கல்பட்டு, தாம்பரம்,மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில்போலீஸார் இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
