பிளஸ் டூ முடிவுகள்: 76.6% தேர்ச்சி- நாமக்கல், சென்னை மாணவிகள் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sathyaபிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் மாணவி ஜி. சத்யா, பாளையங்கோட்டை மாணவி ஆஷா பெனாஸிர்,சென்னை மாணவிகளான சுஜானா, ஷோபனா ஆகியோர் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வை 5,72,749 மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று காலைவெளியிடப்பட்டது.

தேர்வு எழுதியவர்களில் 76.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.5 சதவீதம் அதிகமாகும்.இவர்களில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 79.3 சதவீத மாணவியரும், 74.1 சதவீத மாணவர்களும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

முதலிடம் பிடித்த மாணவி:

இதில், தமிழை முதன் மொழியாக எடுத்துப் படித்த நாமக்கல் குறிஞ்சி மேல் நிலைப்பள்ளி மாணவி ஜி.சத்யா 1,200க்கு 1,185மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Asha with her Motherதிருநெல்வேலி பாளையங்கோட்டை ரோஸ்மேரி மேல் நிலைப்பள்ளி மாணவி ஆஷா பெனாஸிர் 1,183 மதிப்பெண்களுடன்2வது இடத்தையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி ஆயிஷா, நாமக்கல் எஸ்.ஆர்.வி, பள்ளி மாணவர் ஸ்ரீதர்ஆகியோர் தலா 1,182 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில் ஆஷா பெனாசிர் 10ம் வகுப்புத் தேர்வில் 494 மார்க்குகள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஆங்கில பாடம் எடுத்து முதலிடம்:

தமிழ் அல்லாத பிற மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில், சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி சுஜானா1,200க்கு 1,190 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், அதே பள்ளி மாணவி ஷோபனா 1,189 மதிப்பெண்களுடன்இரண்டாவது இடத்தையும்,

பொன்னேரி மாணவர் ஷிவ்ராஜ், சென்னை மாணவி மாயா ஆகியோர் தலா 1,188 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும்பிடித்துள்ளனர்.

கணிதத்தில் 2,613 பேரும், இயற்பியலில் 1,131 பேரும், வேதியியலில் 1,677 பேரும், உயிரியலில் 1,270 பேரும், தாவரவியலில்13 பேரும், விலங்கியலில் 17 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி சத்யா கூறுகையில், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பின்காரணமாகவே முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவம் படிக்க விரும்புகிறேன் என்றார்.

சென்னை மாணவிகள் இஜானா மற்றும் ஷோபனா ஆகியோர் கூறுகையில்,

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தோம். மாநில அளவில் ரேங்க் பெறுவோம் என்பதை எதிர்பார்த்திருந்தோம்.அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்கப் போகிறோம் என்றனர்.

சுனாமி பாதித்த பகுதிகளில்:

அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிளஸ் டூ தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டன. இத் தேர்வை 10,232 மாணவ,மாணவிகள் எழுதினர். இவர்களில் 77 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

விபத்தில் பலியான மாணவர் சாதனை:

சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி தமிழ் மொழிப் பாடம் அல்லாத பிரிவில் முதலிடத்தை பிடித்ததுடன் மேலும் பலசாதனைகளை படைத்துள்ளது.

இந்தப் பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களில் ஒருவர் ஆதித்யா. இவர் 1,159 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்தமாணவர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2 தினங்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் இவர் உயிரிழந்துவிட்டார்.

தங்களது பள்ளி, பிளஸ் 2 தேர்வில் பல சாதனைகளை படைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த இப்பள்ளியின் ஆசிரியர்கள்மாணவர் ஆதித்யாவின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+