கலாம் ரஷ்யா, சுவிஸ், ஐஸ்லாந்து பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜனாதிபதி அப்துல் கலாம் ரஷ்யா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 22ம் தேதி கலாம் தனி விமானத்தில் கிளம்புகிறார். ஜூன் 4ம் தேதி வரை அவர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பார்.

முதலில் மாஸ்கோ செல்லும் கலாம் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்திய விஞ்ஞானிகளுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கிய ரஷ்ய விஞ்ஞானிகளுடன் கலாம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஏவுகணையை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளில் கலாமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷ்யாவின் ராக்கெட், விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுடனும் கலாம் ஆலோசனை நடத்துகிறார்.

அங்கிருந்து 24ம் தேதி சுவிட்சர்லாந்து செல்லும் கலாம், அங்கு ஜெனீவா, சூரிச், பெர்ன் ஆகிய நகர்களுக்குச் செல்கிறார். பெர்ன் நகரில் மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இல்லத்துக்கு கலாம் செல்கிறார்.

ஜெனீவாவில் அணு ஆராய்ச்சி மையங்களை பார்வையிடும் கலாம், அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

சுவிஸ் பயணத்துக்குப் பின் கலாம் ஐஸ்லாந்து செல்கிறார். அந் நாட்டின் தலைநகர் ரெய்ஜாவிக்கில் நிலநடுக்க முன்னறிவிப்பு ஆய்வு மையத்துக்கு கலாம் செல்கிறார். அந்நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தும் கலாம் பின்னர் ஜூன் 1ம் தேதி உக்ரைன் செல்கிறார்.

அந் நாட்டு பாதுகாப்பு, விண்வெளி ஆராச்சியாளர்களுடன் கலாம் ஆலோசனைகள் நடத்துகிறார். உக்ரைனில் நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 4ம் தேதி கலாம் டெல்லி திரும்புவார்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவுக்குச் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி கலாம் தான். பாதுகாப்புத்துறை விஞ்ஞானியாக இருந்தபோது பல முறை அந்நாட்டுக்குச் சென்ற கலாம், ரஷ்ய விஞ்ஞானிகள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+