இரட்டை டம்ளர் முறை: சேலம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சேலம் மாவட்டத்தில் இன்னும் டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்நேரடியாக ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் மாநில உள்துறைச் செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், திருமலைகிரியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிம்ன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,திருமலைகிரி பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை பின்பற்றப்படுகிறது.
இந்த முறையை எனது மகன் தட்டிக் கேட்டபோது அவனை ஜாதி வெறியர்கள அடித்துத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார்கூறப்பட்டபோது, அவர்கள் உதவிக்கு வரவில்லை. மாறாக, எனது மகனையே போலீஸார் கைது செய்து பொய் வழக்குப் போட்டுள்ளனர்என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்தப் புகார்களை சேலம் போலீஸார் மறுத்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம், இந்தப் பிரச்சினை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் நேரடியாககிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும்.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரும் இந்த ஆய்வில் பங்கேற்க வேண்டும்.
இந்த ஆய்வின் அறிக்கையை மாநில உள்துறைச் செயலாளரிடம் 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனது உத்தரவிட்டார்.
சேலம் பகுதியில் இரட்டை டம்ளர் முறை என்பது வெளிப்படையாகவே இருந்து வரும் நிலையில், அப்படியெல்லம் இல்லவே இல்லைஎன்று ஒட்டு மொத்தமாக பூசணிக்காயை சோற்றில் மறைக்க போலீசார் முயன்றனர். இது காவல்துறையில் மறைமுகமாக, நீக்கமற நிலவும்ஜாதீயத்தையே காட்டுகிறது.
இந் நிலையில் தான் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications