மத்திய அமைச்சராகிறார் வாசன்: தலைவராகிறார் எஸ்.ஆர்.பி?
டெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.வாசன் மாற்றப்படுகிறார். அவரை மத்திய அமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவுசெய்துள்ளது. தமிழக காங்கிரசின் புதிய தலைவராக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்த பிறகு, வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் காங்கிரஸ்தலைவராக நியமிக்கப்பட்டார். செயல் தலைவராக ஈ.வி..எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.
ஆனால், கட்சியில் இரண்டாம் மட்ட கோஷ்டித் தலைவர்களிடம் இருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இளங்கோவன், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம், அன்பரசு, தங்கபாலு ஆகியோரின் கோஷ்டிகள் தொடர்ந்து வாசன்மீது புகார் பட்டியலை வாசித்தபடி உள்ளன.
இந் நிலையில் வாசனை மத்திய அமைச்சராக்கிவிட்டு அவருக்குப் பதிலாக வாசன் கோஷ்டியைச் சேர்ந்த வேறு ஒருவரை தலைவராகநியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் சோனியா திட்டமிட்டுள்ளார். மணிசங்கர அய்யர் உள்ளிட்டோரின்இலாக்காக்கள் மாறும் என்றும், இளங்கோவனின் பதவி பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ஜி.கே.வாசன் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடந்தஆலோசனைக்குப் பின்னர் வெளியில் வந்த வாசன் தலைவர் பதவி குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
சோனியா-வாசன் சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், சட்டசபை இடைத் தேர்தல் முடிவு குறித்தம், கூட்டணி குறித்தும்சோனியா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், வாசனுக்குப் பதில் யாரைப் புதிய தலைவராகப் போடலாம் என்றும் அவரிடம் சோனியா ஆலோசனை கேட்டதாகவும் தெரிகிறது.
ஜி.கே.வாசனுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தங்கபாபு,ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மோதி வருகிறார்கள். இவர்களில் எஸ்.ஆர்.பிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாககூறப்படுகிறது.
காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களுடன் இயைந்து செல்லக் கூடிய தலைவர் என்பதால், எஸ்.ஆர்.பியையே மீண்டும்தலைவராக்க சோனியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இளங்கோவனை மீண்டும் கட்சிப் பொறுப்புக்கு அனுப்பவும் சோனியாமுடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தோல்வி: கவலை இல்லை- காங்
இதற்கிடையே தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை என அக் செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்வி கூறினார்.
டெல்லியில் அவர் கூறுகையில், தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதில் எந்த விசேஷமும் இல்லை. இடைத்தேர்தல் முடிவுகள், வாக்காளர்களின் முழுமையான மன நிலையை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை.
இடைத் தேர்தல் முடிவுகளால் பொதுத் தேர்தல் முடிவுகளில் எப்போதுமே பாதிப்பு ஏற்பட்டதில்லை. எனவே இந்த தேர்தல் முடிவுகள்குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார் சிங்வி.
நாளையுடன் ஓராண்டு நிறைவு:
இதற்கிடையே மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications