என் உயிருக்கு குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண் - ஜெ
சென்னை:
எனது உயிரைப் பறிக்கும் பொறுப்பை விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையை சேர்ந்த ஒரு வெடிகுண்டு பெண்ணிடம்ஒப்படைத்துள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தஆண்டுக்கான ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி பெட்ரோல், டீஸல், மருந்துகள் முதலிய பொருட்களை இலங்கைக்குதிருட்டுத்தனமாக கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக்தை தொடர்ந்து ஒரு தளமாக பயன்படுத்தி வருகிறது என்றுசில பத்திரிகைகள் பிரதானமாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.
தமிழக அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக உறுதியான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை எடுத்து வருகின்றநிலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை போன்ற ஒருதோற்றத்தை உருவாக்கும் தீயநோக்கிலான இந்த முயற்சி எனக்கு ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்றுஉள்துறை அமைச்சருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து நான் எடுத்து வருகின்ற உறுதியான நிலைப்பாட்டை நான் விரிவாகஎடுத்துச் சொல்ல தேவையில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
தமிழகத்தில் இவ்வியக்கத்தினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகவும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்என மாநில அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகள் தனிப்பட்ட அதிகபட்ச பேரபாயத்திற்கு என்னை இலக்காக்கி தொடர்ந்து எனக்கு குறி வைத்துள்ளனர்என்பதை நான் மத்திய உள்துறை அமைச்சருக்கு எடுத்துக் காட்டியுள்ளேன்.
விடுதலைப்புலிகளிடமிருந்து தனிப்பட்ட குறிப்பான அபாயம் உள்ளது என்றும், இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் பணிதற்கொலை வெடிகுண்டு பெண்மணி ஒருத்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்துஅளிக்கப்பட்ட தகவல் குறித்து உள்துறை அமைச்சரின் சிறப்பு கவனத்தை நான் ஈர்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications