திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்: பக்தர்கள் பீதி
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இன்று காலை திடீரென 25 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இன்று வைகாசி விசாகம் என்பதால் கடற்கரையில்குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டு பீதியடைந்தனர்.
கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியிலுள்ள1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி விட்டன.
இதையடுத்து நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சி என்ற கிராமத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால்இங்கும் பீதி ஏற்பட்டது.
இந் நிலையில் திருச்செந்தூர் கடல் இன்று காலை திடீரென உள்வாங்கியது. காலை 8 மணியளவில் கோவில் பகுதியை ஒட்டிய கடலில் சுமார்25 அடி தொலைவுக்கு கடல் நீர் உள்வாங்கியது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும், அய்யா வழி கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில்கடல் உள் வாங்கியது.
இன்று வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.கடல் உள்வாங்கியதைக் கண்டதும்பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரும் அச்சப்படாமல் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
இது குறித்து இங்கு வந்த பக்தர்கள் கூறுகையில், பல இடங்களிலும் கடல் கொந்தளிப்பு ஏற்படுகின்ற போதிலும், திருச்செந்தூரில் மட்டும்அவ்வாறு இல்லாமல் கடல் உள்வாங்குகிறது. இது முருகப் பெருமானின் அருளாகும் என்றனர்.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது இது 3வது முறையாகும். கடந்த டிசம்பரில் சுனாமி ஏற்பட்டபோது இங்கு கடல் உள்வாங்கியது.இதற்குப் பிறகு கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் கடல் உள்வாங்கியது. தற்போது 3வது முறையாக கடல் உள்வாங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications