சூடானில் தவித்த 29 தமிழர்கள் மீட்பு
சென்னை:
சூடான் நாட்டில் வேலைக்காக சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 29 தொழிலாளர்களை சென்னைமாநகர காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அல் கரீப் வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் சூடான் நாட்டில், எண்ணெய் சுத்திகரிப்புநிறுவனம் ஒன்றில், கட்டுமான வேலைக்காக சென்றனர். இதற்காக ஒவ்வொருவரும் ரூ. 45,000 வரை சென்னை நிறுவனத்திடம்கொடுத்துள்ளனர்.
ஆரோக்கியமில்லாத, தூய்மையற்ற, சாப்பிடவே முடியாத உணவு கொடுக்கப்பட்டது. சம்பளம் சரியாக தரப்படவில்லை. இதுகுறித்துகேட்டதற்கு 29 பேரும் சித்திரவதை செய்யப்பட்டனர்.
இதனால் 29 பேரும் மிகுந்த மன வேதனைப் பட்டனர். இவர்களில் ஒருவரான வெங்கட்ராமன் என்பவர் சென்னயில் தனது சகோதரரும்,வழக்கறிஞருமான வரதராஜனுக்கு இது குறித்துத் தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வரதராஜன், சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜை சந்தித்து புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சென்னை போலீஸார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். சூடான் நாட்டுத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு 29பேரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையின் பலனாக சூடானிலிருந்து 29 பேரும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
தங்களை பத்திரமாக மீட்ட சென்னை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக மீண்டு வந்தவர்கள் கூறினர். இவர்களைசூடான் நாட்டிற்கு அனுப்பி வைத்த அல் கரீப் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications